பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 அன்னை சரோஜா ராமமூர்த்தி SAMAAASAASAASAASAASAASAASAASAAAS சுள்ளிக் கத்தையை மளுக் மளுக் கென்று முறித்து வைத்து ஊதாங் குழலினுல் சுர் 'ரென்று அடுப்பை ஊதி விட்டாள் செல்லி. அடுப்பின் மீது இருந்த சோற்றுப் பானையில் அரிசி தள தள’வென்று கொதிக்க ஆரம்பித்தது. குடிசையின் மூலையில் முடங்கிக் கிடந்தான் துரை என்கிற அவள் மூத்த மகன். இளைய பையன் கதிர் வேலு மட்டும் மிகவும் விழிப்பாகத் தாயின் எதிரில் சோற்றுக் கிண்ணத் துடன் சாப்பாட்டுக்காகக் காத்திருந்தான். செல்லி சோற்றை வடித்து நிமிர்த்தியதும் பக்கத்தில் இருந்த அகலமான சட்டியில் அதைக் கொட்டினுள். தும்பைப் பூவைப் போல சோறு பல பல வென்று அதில் கொட்டியது. - 'அம்மா! பசிக்குது’’ என்ருன் கதிர்வேலு. * பசிக்குதா? பசிக்கும் பசிக்கும். இரண்டன வடை யையும் அண்ணனுக்குக் கொடுக்காம துண்ணே பாரு, புசிக்கும்டி பயமவனே. என்ன த்தைக் கடிச்சிப்பே சேர்த்துக்கு?’