பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 39 " ஏன் கொழம்பு வக்கல ?’ கதிர்வேலு அதிகாரத் துடன் கேட்டான் தாயைப் பார்த்து.

  • கேப்பேடா ! ஏன் கேக்க மாட்டே ? உங்க அப்பன் வச்கட்டுப் போனுன் பாரு வீடும், காணியும் ! நீ கேக்க மாட்டே சீ... எழுந்திருச்சிப் போயி ஒரணுவுக்கு ஒடச்ச கடலே, பச்சை மிளகா வாங்கிட்டு வா, போ. தொவையல் அரெச்சு தண்ணி ஊத்திச் சோறு போடுறேன். சுருக்குப் பையை அவிழ்த்து வெற்றிலே, புகையிலேச் சருகுடன் உறவாடிக்கொண்டு முடங்கிக் கிடந்த ஓரணுவை எடுத்துக் கதிர்வேலுவிடம் கொடுத்தாள் செல்லி.

கதிர்வேலு கடைக்கு ஓடியவுடன் செல்லி துரை படுத் திருந்த இடத்துக்குச் சென்று, அவன் அருகில் உட்கார்ந் தாள். பிறகு மெதுவான குரலில், ராசா, எழுந்திரு : சோறு திங்க வாடா கண்ணு ' என்று கூப்பிட்டாள். துரைக்குத் தாயை ஏறிட்டுப் பார்க்கவே பிடிக்கவில்லை. அவள் தன்னை ஒப்புக்காக ராசா, கண்ணு' என்றெல்லாம் அழைப்பதாக நினைத்தான். பிறந்த சில நாட்களில் நோயாளி ஆகிவிட்ட அவனை எல்லோரும் வெறுக்கிருர்கள் என்பது அவன் தீர்மானம்.

  • மொண்டிப் பையன்டோய்......!’’ துரைக்குப் பெயரே அதுதான். காலும், கையும் கோணிக்கொண்டு, சுரைக் காய் வயிறும், வற்றிய முகமுமாக அவன் குடிசை மூலையில் பதுங்கியே தன் நாட்களே விரட்டிக் கொண்டிருந்தான்.

செல்லி அவனுக்காக அழுது தீர்த்து ஓய்ந்து விட்டாள். * அப்பன் ஒழுங்கானவளுக இருந்தால்தானே பிறந்தது சரியாக இருக்கும்? அவன் கெட்டலஞ்சவன்தானே’ என்று இறந்துபோன கணவனே ஓயாமல் சபித்துக்கொண்டே இருந்தாள் அவள். வாழைக் குருத்துப்போல் தளதள வென்று இருக்கும் கதிர்வேலுவைப் பார்க்கும்போதெல்லாம், அவள் பெருமையுடன் தன்னேயே பார்த்துக்கொண்டாள். ஆனல், மொண்டிப் பையன் துரையின் இதயம் தங்க மாகவும், ராசாப்பையன் கதிர்வேலுவின் இதயம் வேம்பா