பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 40 கவும் இருந்த விந்தையை அவள் நினைத்து நினைத்து வியந்தாள். துரை முக்கி முனகிக்கொண்டே எழுந்திருந்து அடுப் படிக்கு நொண்டிக்கொண்டே வந்து உட்கார்ந்தான். செல்லி, குடிசைக் கூரையில் ஒளித்து வைத்திருந்த பொட்டலத்தை அவிழ்த்து இரண்டு வடைகளை அவன் முன்பு வைத்துவிட்டு, கிண்ணத்தில் சோறு போட்டு தண்ணிர் ஊற்றினுள். துரை இரண்டு வாய் அள்ளிச் சாப்பிட்டிருக்க மாட்டான். கதிர்வேலு கடையிலிருந்து ஓடி வந்தான். துரை ஒவ்வொரு வாய் சோற்றுக்கும், வடையைக் கடித்துக் கொண்டு சசப்பிடுவதைக் கவனித்தான். அவனுக்கு ஆத் திரம் பற்றிக்கொண்டு வந்தது.

  • யம்மோவ்......உனக்கு அவன்தானே ஒசத்தியாப் பூட்டான்?’ என்று செல்லியைப் பார்த்துக் கத்தின்ை.
  • நீ மத்தியானம் துண்ணலையாடா நாலு வடை ? இதுக்குப் போய்க் கத்துறயே?’ என்று செல்லி கேட்கவும், " ஆமாமாம்..... இந்த மொண்டிப்பய தானே உனக்குச் சம்பாதிச்சி வாரியாருன் ? நான் எண்ணெய்க் கடையிலே தினம் நாலு அணு சம்பாதிக்கிறது ஒனக்கு தெரியுதா ?” என்று பதிலுக்குக் கேட்டான் கதிர்வேலு.

துரைக்கு என்ன தோன்றியதோ ? கலத்துச் சோற்றை நகர்த்தி விட்டுப் போய்ப் படுத்தவன்தான். அப்புறம் அவன் ஒரு வாரம் வரையில் கண் விழிக்கவில்லை. உலகத் தவரின் சுடு சொற்களுக்கு ஆளாகாமல் அவன் கண்ணே மூடிக்கொண்டபோது, செல்லி அலறிய அலறல் அந்த வட்டாரத்தையே சோகத்தில் ஆழ்த்தியது. . . . .” அதன் பிறகு கதிர்வேலுவிடம் அவள் பாசம் படிப் அடியாக வற்ற ஆரம்பித்தது. மவனே! கூடப் பொறந்தவனே முழுங்கிப் போட் பாவி’ என்று அடிக்கடி கூறி அவனே ஏசிக்