பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 41 கொண்டிருந்தாள். மொண்டிப் பையனுக இருந்தாலும் துரைக்கு அவளிடம் அலாதியான பாசம் இருந்தது. எத்தனே நாட்கள் தாயிடம், தன் கை கால்கள் சரியாகி விட்டால் மூட்டை தூக்கியாவது அவளைக் காப்பாற்றி விடுவதாகக் கூறி இருக்கிருன் ! கதிர் வேலுவின் குணம் அப்படி அல்ல. எண்ணெய்க் கடையில் சம்பாதிக்கும் காசை நாளடை வில் செலவழித்து விட்டு, வெறுங்கையுடன் வந்து வீட்டில் நிற்பான். சில நாட்களில் வேலேக்கே போகமாட்டான். செல்லிக்கும் அந்த வாழ்க்கை அலுத்து வந்தது. காலையில் எழுந்தவுடன் ஐயர் வீட்டுக்குப் போய் சாணம் தெளிப்பதிலிருந்து, பத்து மணிக்கு அவர்கள் வீட்டுக் குழந்தையைப் பள்ளியில் கொண்டுவிட்டு வரும்வரை இடுப்பு நிமிர வேலே இருந்துகொண்டே இருக்கும். பகல் வேளே களில் அரசமரத்தடியில் ஒரே விதமான வம்புப் பேச்சுகள். மறுபடியும் பகல் இரண்டு மணியிலிருந்து மாலை ஐந்துவரை ஐயர் வீட்டு வேலே , இரவு இருக்கவே இருக்கிறது தாய்க்கும் மகனுக்கும் நடக்கும் தினப்படி சண்டை சச்சரவு. " அடியே செல்லி! நீ ரொம்பக் கெட்டுப் பூட்டே. அந்தக் கொயந்தையைக் கண்டா ஆவல்லே, உனக்கு ’’ என்று செல்லியின் நாத்தி, கதிர்வேலுவுக்காகப் பரிந்து கொண்டு வந்தாள். தே......நீ சும்மாக் கெட ? உனக்கென்னு தெரியும்? அவன் காலணு கொடுத்து மாசம் ஒண்ணுவுது தண்டச் சோறு போட அவன் அப்பன் சேத்து வச்சுட்டா போயி ருக்கான் ?” "என்னடி சொன்னே மூதேவி, எங்க அண்ணனைப் பத்தி ?’ என்று நாத்தி பிலு பிலுவென்று செல்லியைப் பிடித்துக் கொண்டாள். சண்டை ஓய்ந்ததும் கதிர்வேலுவை அத்தைக்காரி தன் குடிசைக்கு இழுத்துக்கொண்டு போய்விட்டாள். அவள்