பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.432 பிள்ளையில்லாதவள். அண்ணன் மகனைப் பார்த்து ஆளாக்கி ஆதரவு தேடிக்கொள்ள முனைந்திருக்கலாம். தன்னந் தனியாகக் குடிசையில் உட்கார்ந்திருந்தாள் செல்லி. அன்று அடுப்பு பற்ற வைக்கவில்லே அவள். துக்கம் தீருமட்டும் அழுது தீர்த்தாள். கடைசியாகப் பானைத் தண்ணியை மொண்டு குடித்துவிட்டு குடிசைக்கு வெளியே வந்தபோது வானத்தில் கிருஷ்ணபட்சத்து ஆரும் நாள் நிலவு பூத்துவிட்டது. அந்த வட்டாரத்து மக்கள் எல்லோரும் தத்தம் குடிசை வாயிலில் படுத்து விட்டார்கள். செல்லி முழங்காலேக் கட்டியபடி வெளியே உட்கார்ந் திருந்தாள். சற்றுத் தொலைவில் இருந்த வேப்பமரத்தின் அடியில் முக்காடிட்ட உருவம் ஒன்று நின்றிருப்பதைக் கண்ட செல்லி அப்படி யொன்றும் பயந்து விடவில்லை. எலும்பும் தோலுமாக இருந்த தன் கணவனைப் பார்த்துப் பார்த்து உறுதி அடைந்தவள் அவள். மறுபடியும் உற்றுப் பார்த்தாள் அந்த உருவத்தை. உருவம் நகர்ந்து நகர்ந்து வந்தது. இந்தாப்பா ! இங்கே வா.....நீ யாரு?’ என்று கேட் டாள் செல்லி. அந்த ஆள் பேசாமல் நின்ருன். - நீ யாருன்னு கேக்கறேனே மரமாட்டம் நிக்கறியே, சொல்லேம்ப்பா.’’ " நான் ராசப்பன்' என்று முணுமுணுத்தான் அவன். செல்லி சிரித்து விட்டாள்.

இந்தாய்யா! நான் ராசப்பன்னு சொல்லிட்டா எல்லாம் புரிஞ்சிடுமா ?”

கொஞ்சம் சோறு இருந்தாப் போடேன்- கேட்ட தற்குப் பதில் கூருமல் வேறு ஏதோ கேட்டு வைத்தான் அவன். செல்லி குடிசைக்குள் அணந்து கிடந்த காடா விளக்கை ஏற்றிள்ை. பழையதுப் பானையில் கை விட்டுப் பார்த்தாள். சோறு நொச நொச வென்று இருந்தது.