பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9


" நேற்றைக்கு ராத்திரி. செளக்கியம்தானே மாமா ?” " உம், உட்கரர்.” இல்லே. நான் போகணும். மாமியும் செளக்கியம் தானே? சரி, நான் வரேன். சும்மா பார்த்து விட்டுப் போகத்தான் வந்தேன்.” துரையோடு சேர்ந்து படித்தவன், கோபாலன். கல்லூரியில் இரண்டாவது ஆண்டுத் தேர்வை எழுதிவிட்டு வந்திருக்கிருன், அவன். துரை இருந்தால்?......ஆஜானு பாகுவாய் வளர்ந்திருப்பான்! வாசற்கதவைத் தள்ள முடிய வில்லையே, கோபாலனுல். துரையாக இருந்தால், ஒரு உதையில் திறந்துவிட மாட்டான பழைய வீடு. குறுகலா, கனமான நிலைப்படி. அதற்கேற்ற கதவுகள். " துரை, நான்பாட்டுக்குப் பணத்தைச் சேமித்துக் கொண்டே போகிறேன். யாருக்காகடா, இவ்வளவும் ? நீ உயிரோடு இருந்தால் வரமாட்டாயா ? எனக்காக வர வேண்டாம், உன் அம்மாவுக்காக வரமாட்டாயா ? நீ வந்து விடுவாய் என்று அவள் எவ்வளவு நிச்சயமாய் இருக்கிருள், தெரியுமா ?......”* ஐந்து வருடங்கள் ஓடிவிட்டன. ஆனல் கனகத்தின் நம்பிக்கையில் ஐந்து அரிசி முனையளவுகூடக் குறைய 536ుశివు. சென்ற வருஷம், அருணுசலத்தின் ஒன்றுவிட்ட அண்ணு பெண்ணுக்குக் கல்யாணம். அண்ணுவே வந்து அழைத்தார். கல்யாணம், பத்து மைல் தூரத்தில்தான் நடைபெற விருந்தது. முகூர்த்தத்தன்று அதிகாலேயில் வண்டியைக் கட்டிக்கொண்டு புறப்பட்டால், சாப்பாடு முடிந்ததும் திரும்பி வந்துவிடலாம். அருணசலம் இரண்டு, மூன்று தடவைகள் கனகத்தை அழைத்தார். அவள் வரவில்லை. நீங்கள் போய்விட்டு வாங்கோ. நாம் இல்லாத சமயத்தில் அவன் வந்து, பூட்டியிருக்கும் வீட்டைப் பார்த்