பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

151


‘ எங்கே வந்தே?’ என்று எல்லோரும் கேட்டார்கள். * எம் மவனைப் பார்க்க” என்ருள் செல்லி. ‘ அடி சக்கை! இவ மகனுமே ?...” " ஏன்? அவன் என் மகன் இல்லையா ? நான் பத்து மாசம் சுமந்து பெத்த மகன்தானே ?”

  • பெத்தே! பெருமையைப் பாரு பெருமையை ! ஒடு காலிக்குப் பெருமை வேறே !’

சோடா வண்டி இழுத்துக்கொண்டு வந்த கதிர்வேலு கூட்டத்தைப் பார்த்து வண்டியை நிறுத்தி விட்டு வந்தான். " வாடா அப்பா ! உன் ஆத்தாக்காரி வந்திருக்கா பாரு, உறவு கொண்டாடிக்கிட்டு ' என்று வரவேற்ருள் அத்தைக்காரி.

  • கண்ணு! என் ராசா, இங்கே வாடா மவனே !” என்று அழைத்தாள் செல்லி.
  • நீ ஏன் இங்கே வந்தே? உன்னை யார் கூப்பிட் டாங்க?' என்று கத்தின்ை கதிர்வேலு.

அன்று யம்மோவ் என்று அலறியவன்தான் இன்று இப்படிப் பேசின்ை.

  • ஏண்டா கண்ணு அப்படிக் கேக் குறே? உன்னைப் பார்க்கத்தாண்டா வந்தேன்.”
  • பாக்க வந்தியா ? பாத்தாச்சுல்லே, போ.பின்னே...” கதிர்வேலு எரிந்து விழுந்தான். செல்லி ஏறிட்டுப் பார்த்தாள் அவன. 'யப்போவ்......இந்த மண்டபத்துலே பொங்கித் தின்னுக்கிட்டு விழுந்து கிடக்கிறேண்டா மவனே. சாகிற காலத்துலே உம் மூஞ்சியைப் பாத்துக்கிட்டே சாவ ஆசையா இருக்குடா......"