பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 சிதைந்த கூடு AMAMAMMJSMMSMSMS ...... مـ ہمہ ۔مبہمہمہ -வாசவன் AAAAAASA SAASAASAASAASAASAAAS சிந்தாமணி பொய்யாகி விட்டாள் ! நேற்றுவரை எல்லா நிஜங்களுக்கும் நிஜமாக இருந்து, இன்று எல்லாப் பொய்களுக்கும் பொய்யாகிப் போனவள் ஊர்க் கோயில் மூன்றடிக் குழியிலே உறங்குகிருள். என் நெஞ்சில் மண்ணே அள்ளிப்போட்ட அந்தச் சண்டாளியை நானும் வஞ்சம் தீர்த்துக்கொண்டேன் மூன்று பிடி மண்ணே அந்தக் கழுதையின் நெஞ்சில் வாரி இறைத்தேன். ஆனல் அது மண் ணு ? இல்லை. என் கண்களிலிருந்து திரண்ட வெம்பனித்திரள். வெயிலில் வெடித்து விடுகிற வெறும் பனித்துளிகூட அல்ல அது. என் நெஞ்சைக் கிழித்துப் புறப்பட்ட உதிரப் பெருக்கு ! ' கொடுத்து வைத்தது மண்ணுேடு போய்விட்டது. மனம் கலங்கி ஆவது என்ன ? வாருங்கள் போகலாம்!” என்று உயிரோடு உறைத்துவிட்ட என் கைகளைப் பிடித் திழுத்தார் மேலவிட்டுப் பரமசிவம் பிள்ளை. அவர் குரலில் ஈரம் இல்லை; ஒர் உயிர் மலர் எந்த லட்சியத்துக்காக மலர்ந்