பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154


ததோ, அந்த லட்சியம் நிறைவேறுவதற்கு முன்னமேயே அது கருகி உதிர்ந்து விட்டதே என்ற அனுதாபம் இல்லே. வெறும் உபசரனைப் பேச்சுக்களால் பிறரின் துக்கத்தில் கலந்து கொள்கிற எத்தனையோ சம்பிரதாய மனிதர்களில் அவரும் ஒருவர். என்னைச் சூழ்ந்திருந்த அத்தனை பேரும் மலட்டு மனம் உள்ளவர்கள். போகப் பறந்தார்கள். ஐயோ, என் குழந் தையின் பஞ்சு உடலிலே மண்ணை வெட்டிப் போடுகிருனே வெட்டியான்! பொறுப்பாளா என் செல்வம்? பெற்றவன் அருகிருக்க, பிறந்த மகள் மண்ணுேடு புதைகிருளே ! அதோ அவள் கால்கள் மறைகின்றன. நான் ஆசையோடு முந்தா நாள் பட்டுக்கயிறு பூட்டிய அந்த இடுப்பிலே மண் விழுந்து விட்டது. என் இதயமான அந்த நெஞ்சில் இரக்க மின்றி மண்ணே வெட்டிப் போடுகிருனே வெட்டியான் ! ' அடே, கொலைகாரா! என் குழந்தை ரொம்பச்சாதுடன. ஏண்டா அவளேப் புதைக்கிருய் ? ஐயோ, என் மகளைக் குழியிலிருந்து எடுத்து என்னிடம் கொடுத்துவிடு -கொடுக்க மாட்டாயா? உன்னேயே அந்தக் குழியில் வைத்துப் புதைக் கிறேன் பார்!’ வெட்டியானே நோக்கி ஓடிய என்னைப் பிடித்து இழுத் துக்கொண்டு போயிற்று அனுதாபம் காட்ட வந்த அரக்கர் கூட்டம். நேற்று அவளே உயிரோடு சுமந்தேன்; சற்று நேரத் துக்கு முன்பு அவளைப் பிணமாக்கிச் சுமந்தேன். இப் பொழுது என்னேயே பிணமாக்கிச் சுமந்து கொண்டு போகிறேன். இந்தப் பிணத்தைக் குளத்தில் கொண்டுபோய்த் தள்ளிஞர்கள். மூழ்கி எழுந்தவுடன் விழுந்து பிடுங்கும் வேதனைக்கு இரையாக உயிர்ப்படைந்தேன். நீரில் அலை அடுக்குகளில் இரண்டு கொடிக்கால்களின்