பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

155


உருவம் இல்லை. வெறும் குரல் அலை பேசுமா? இல்லை. இல்லை! அந்தக் குரலைப் புரிந்துகொள்ள எனக்கு உருவம் வேண்டாம். என்னில் ஒரு கிளையான என் அருமைச் சிந்தா மணிதான் என்னை அழைக்கிருள். ஒரு வாரத்துக்கு முன்பு இப்படித்தான் நான் இந்தக் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தேன். பிடிவாதமாக வம்படி செய்த சிந்தாமணியைப் படித்துறையில் உட்கார வைத்திருந்தேன். தினசரி நான் குளத்துக்கு வரும்போ தெல்லாம் முரண்டுபண்ணி என்னுடன் புறப்பட்டுவிடுவது அவளுடைய இரண்டாவது வயதில் ஏற்பட்ட ஒரு பழக்கம். அப்பொழுதும் அப்பா என்றுதான் அவள் கூப்பிட் டாள், இதே குரலில் ஒலித்த ஆர்வத்துடன். திரும்பிப் பார்த்தேன். சிந்தாமணி நீரில் இறங்கி வந்துகொண்டிருந்தாள். ' அப்பா ! அந்த அலையிலே ஒண்ணேப் பிடிச்சு எனக்கு வெளயாடக் குடுக்கிறியா?" அலைகளில் கையைத் துழாவிக்கொண்டே கழுத்தளவு நீருக்கு வந்து விட்டாள். நான் பாய்ந்தோடி அவள் கன்னத்தில் இரண்டு கொடுத்து உச்சிப் படிக்கட்டில் கொண்டுபோய் வைத்து, 'சாக இருந்தாயே, பினமே!’ என்று பற்களைக் கடித்தேன். அவள் அழுது கதற வேண்டுமே ! சாதாரண மனித உணர்வுகளில் என்னைப் போன்றவர்கள் சிக்கித் தடுமாற, உணர்வுகளைக் கடந்து நிற்கும் ஒரு சுபாவம் இந்த நான்கு வயதுப் பிஞ்சுக்கு எப்படி வந்தது? என்னுடைய கோபம் எவ்வளவு அசட்டுத்தனம் என்பதை நிரூபிப்பவள் போலச் சிரித்தாள். "உனக்கு வேணுங்கிற பணத்தை ஆபீஸிலே போய்க் கொண்டுக்கிட்டு வர்றியே, அதைப்போலே எனக்கு வேணும்கிற அலையை நான் கொண்டுக்கிட்டு வரணும்னு ஆசைப்பட்டது தப்பா? அப்போ, நீயும் ஆபீஸாக்குப் போய்ச் சாகும் பிணம்தான?” அவள் வயதுக்கேற்ற கேள்வியா அது? என் அறி வுக்குப் புலப்படாத கேள்வியும் கூடத்தான் அது! ஒவ்