பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156


வொருவரும் செத்ததற்குப் பிறகு சாவதில்லை. வாழும்போதே சாகிருர்கள்; சாகும்போதே வாழ்கிருச்கள். இது புதிர் போலத் தோன்றிலுைம் விளங்கிக்கொள்ளக்கூடிய வேத னேக்குரிய ஒர் உண்மைதான். ஒவ்வொருவருக்கும் சாவுக் காகக் கணிக்கப்பட்ட காலத்தில் சென்று மறையும் ஒவ் வொரு விநாடியிலும் செத்து, வரவிருக்கிற ஒவ்வொரு விநா டியிலும் செத்துக்கொண்டே இருக்கிருர்கள். நம்முடைய வாழ்நாளைக் குறுக்கிக்கொண்டு வரும் சாவுக் காலத்தை வாழ்க்கை என்று நம்பி ஏமாறுகிருேம். இதைக் கூறிவிட்டாளே என் கண்மணி! அவளை உச்சி மோந்து உள்ளம் குளிர வேண்டியவன், அப்பொழுது கண்டிப்புள்ள ஒரு தந்தையாகத்தான் நடந்து கொண்டேன். அவளேக் கொண்டாடினுல் குளிர் விட்டுப் போய் மீண்டும் தண்ணிரில் இறங்கிவிட்டால் ?

  • " பேசாதே!” என்று அதட்டி விட்டு மீண்டும் என் குளியலேத் தொடங்கினேன். -

" அப்போ என்னேப் பேசாதேன்னு வாயிலே அடிச் சாய், இப்போதாவது பேசலாமா ?” என் குழந்தை அண் டாத ஆழத்தில் இறங்கி, என்ன நெருங்கிக் கேட்கிருள். இப்பொழுது நான் அறை கொடுப்பதற்கு அவள் கன்னம் இல்லை. என் ஊமை உள்ளத்தின் உருப்படியான கருவியாக இருந்த வாய்கூட அடைத்து விட்டது. " அப்பா ! 'அலே’ என்கிற பொய்யைப் பிடிக்க ஆசைப் பட்ட என்னே அன்னிக்கு அறைஞ்சியே, நீ மட்டும் எப்படி இருக்கியாம்? உனக்கும் எத்தனை ஆசை ? ஆபீஸிலே உத்தியோகம் உயரனும், அம்மாவுக்கு அம்பாரமா நகை போடணும், பெரிய மாடி வீடு கட்டணும் என்கிற ஆசை களிலே நீ அகப்பட்டுத் தவிக்கிறியே, இதுக்கு விடுதலை வேணும்? இப்போப் பாரேன். நானும் இல்லை ; ஆசையும் இல்லை; ஆழமும் இல்லை; அலையும் இல்லை..." "சிந்தாமணி....!" நீரைக் கலக்கியது என் அலறல்.