பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

157


சீறிப் புரண்டன அலைகள். சுழி சுழியாய், நீளம் நீளமாய், திட்டுத் திட்டாய், நுரை நுரையாய்ப் பிரிந்து விரிந்து, சரிந்து, மறைந்து விட்டாளா சிந்தாமணி ? " சிந்தாமணி, சிந்தாமணி...... 参き ' ஆழமும் இல்லை ; அலேயும் இல்லை......” இரு கரங்களையும் நீரைப் பிளக்கும் கத்திகளாக்கி நீந்திச் சென்று கொண்டிருந்த என்னே, பரமசிவம் பிள்ளே இழுத்துக் கரை சேர்த்தார். " நாலும் படித்த நீங்களே துக்கத்தைத் தாளாவிட்டால் என்னைப் போன்றவர்களின் உபசாரம் எதற்காகும்? வாருங் கள், வீட்டுக்குப் போகலாம் பரமசிவம் பிள்ளை கரையோடு என்ன விடவில்லை. என்ன என் வீட்டுக்கு நகர்த்தி அழைத்துச் சென்றுகொண்டிருந்தார். பரமசிவம் பிள்ளே சொன்ன நான் படித்த நான்கும் மிக மிக அற்பமானவை. அறிவின் அகங்காரத்தைப் பூதமாகக் கிளப் பி விட்டிருந்த அவை, துக்கத்தின் அதிர்ந்த ஒவ் வொரு சிறு மூச்சிலும் ஒடுங்கிப் புகைகின்றன. சிந்தாமணி எதைப் படித்து அறிவு பெற்ருள்? இதய ரகசியத்தின் ஆழத்தில் புதைந்து கிடக்கும் அறிவு என்னும் எருமையை எந்த ஒரு சக்தியின் மூலம் துள்ளிக் குதித்தோட வைத்தாள்? எனக்குத் தெரியாது ; சத்தியமாகவே தெரியாது. இளங் காலப் பணியின் கனவில் குளித்த மலரின் அற்பப் புன்னகையைப்போல் மறைந்தோடி விட்டாள் சிந்தாமணி. அற்பப் புன்னகை என்று பெரிய மனிதத் தனம் நாடகம் ஆடும் என் அறிவின் பொய்த் திரைக்குப் பின்னே ஓர் உண்மையான தோற்றம் நன்ருகத் தெரிகிறது. சிந்தாமணி சின்னஞ் சிறு வாழ்க்கையை நடத்தி, காலம்’ என்னும் கவிஞனின் நிரந்தரக் கவிதையாக உலவிக்கொண் டிருக்கிருள். நான், நான்...மங்கிய சிந்தனைகளில் மாய்ந் துருகும் ஓர் அனுதாபத்துக்குரிய மனித ஜந்து.