பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160


'ஏய், கிழவி! உனக்கு இங்கிதம் தெரிய வேண்டாம்? இந்த வேளையில் யார் உன்னே ஜோஸியத்துக்கு அழைத் தார்கள்?’ என்று பரமசிவம் பிள்ளை பாட்டியைக் கடிந்து கொண்டார். எங்கள் மனத்தில் ஏற்கனவே நெருப்பு விழுந்து விட்ட போது, இந்தப் பரமசிவம் பிள்ளே ஏன் தற்காலிக ஏமாற்று வித்தையைச் செய்து காட்டுகிருர்? என் மனைவி செளந்தரம் அழுது அழுது மயங்கி விட்டாள். நான் புலம்பிப் புலம்பி உலர்ந்து விட்டேன். சிந்தாமணி எங்களைச் கொல்வதற்கே வந்த ராட்சஸியைப் போலக் கட்டையாகிக் கொண்டிருந்தாள். அவளுடைய கோலத்தில் ஒரு புதிய பொருளே, இது வரையில் எப் போதுமே அருகிருந்து பார்க்காத ஒன்றை, இன்று திடீரென்று நான் பார்க்கிறேன். ஆம்! மரணத்தின் இருள் படிந்த உருவம்தான் ! விடிந்த பொழுது, எங்கள் வாழ்க்கையின் நலனே எரித்த பொழுது, வள்ளிமயிலுப் பாட்டியின் இங்கிதமற்ற சோதிடம் பலித்து விட்டது. சிந்தாமணியின் அவஸ்தைகள் ஒய்ந்து விட்டன. வாழ்க்கையை ஏமாற்றிவிட்ட ஒரு வெற்றிப் பெருமிதம் அவள் துடிக்காத இதழ்களில் கூடி நிற்கிறது. எங்கள் இதயங்களை ஒரு குருக்ஷேத்திரமாக்கி விட்டு, அமர வாழ்வில் சாந்தியைப் பருகச் சென்ற அந்த நன்றி கெட்ட கழுதை எங்களுக்காக அலட்சியத்துடன் போட்டு விட்டுப் போன பரிசு: வெறும் கூடு; உயிர்ப் பறவை சின்னு பின்னப்படுத்தி விட்டுப்போன சிதைந்த கூடு.

  • தம்பி விளக்கைக் கும்பிடுங்கள். உயிர் என்னும் விளக்கின் ஸ்தூல வடிவமான இந்த அகல வணங்கிளுல், அந்த உயிரின் ஆத்மா சாந்தியடையும் ' பரமசிவம் பிள்ளை என் இரு கரங்களையும் சேர்த்துக் குவித்து வைத் தாா.