பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 62 " நானும் இல்லை; ஆசையும் இல்லை..." சிந்தாமணி என் துயர் மந்தை மனத்திலிருந்து வேய்ங்குழல் வாசிக்கிருள். இரைக்கு அலேந்த என் எண்ண ஆடுகள் அந்த நாத வெள்ளத்தில் மயங்குகின்றன. மரணக் கிண்ணத்தில் நிரப் பப்பட்டிருக்கும் தேன் ரஸ்ம் என் முன்னே வைக்கப்பட்டி ருக்கிறது. சிந்தாமணியைப் போல் மரணமும் இன்பம் ஊட்டக் கூடியதா ? இப்பொழுது புயல் ஓய்ந்த கடலைப் போல் என் மனம் அமைதி பெற்றது. அங்கே வேதனை இல்லை ; வேக்காடும் இல்லை. பாசம் இல்லை; பந்தமும் இல்லை. மரணத்தின் வல்லமை பெரிது; ஆளுகை பெரிது.

  • மயானத்தை அடுத்து மரணக் கிணறு ஒன்று இருக் கிறது. வாழ்க்கையில் சோர்ந்து போனவர்களை அனுதாபத் துடன் தன் மடியில் சாய்த்துக்கொள்ளும் தாயைப் போன் றது அது. அதன் இரக்கம் தோய்ந்த மடியில் மரணம் ” என்கிற இன்பத்தை நுகரலாம்.'

எழுந்தேன். மனம் வடிந்தவுடன் கைகால்கள் எல் லாமே இலேசாகி விட்டன. ஐந்தே நிமிஷ நடைதான் வேண்டும், அந்தக் கிணற்றுக்குப் போக. எனக்கு இறை வன் கட்டளை போட்ட காலத்தை இன்னும் ஐந்தே நிமிஷங் களில் நான் ஏமாற்றி விடுவேன் ! சிந்தாமணிக்குத்தான ஏமாற்றத் தெரியும்? எனக்கும் தெரியும் வெடிக்காத மெல்லிய சிரிப்பில் என் உதடுகள் இலேசாக நீங்கிக்கொண்டன. நடந்தேன். ஹாலின் மூலையிலே ஏன் அந்தப் பயங்கரக் கூச்சல்கள் ! நின்றேன். திரும்பிப் பார்த்தேன். எங்கள் குடும்பத்தோடு கொள்ளைப் பிரியத்துடன் தொடர்பு கொண்டிருந்த சிட்டுக்குருவிகளல்லவா அவை ? அந்த நேரத்திலும் அவற்றின் கதையைப் பற்றி ஒரு முறை நினைத்துப் பார்க்கத் தோன்றியது எனக்கு.