பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

165


செளந்தரத்தை இதுவரையில் நான் நினைத்துப் பார்க் கவே இல்லையே! 'அம்மி மிதித்து, அருந்ததியைக் காட்டி, உன்னேக் கைவிடமாட்டேன்’ என்று சத்தியம் செய்தேனே அப்பொழுது? இப்பொழுது சத்தியத்தையே கொல்லும் சண்டாளனுகி விட்டேன்! மூடத்தனமான தற்கொலையைச் செய்து கொள்ளத்துண்டிய என் காய் மனமும், நான் என்னும் புதிரை அவிழ்த்த பொய் மயக்கத்தின் அகம்பாவச் செருக்கும் சேர்ந்து சிந்தாமணியின் பரிசுத்தமான ஆவிக் குக் களங்கம் சூட்டவல்லவா இருந்தன? சீதை அலறிக்கொண்டிருந்தாள். ராமன் அவளே ஆறுதல்படுத்த அவளோடு ஒட்டிக்கிடந்தான். அன்பு என்னும் லாபத்தை அவளிடம் வர்ஷித்துக் கொண்டிருக் கிருன். நான் அடைந்த நஷ்டத்துக்குச் சிந்தாமணியை விழுங் கிக்கொண்ட தும் அல்லாமல் செளந்தரத்தையும் அல்லவா விழுங்கவிருந்தேன் ? ஒரு சிட்டுக் குருவிக்கு இருக்கும் அறிவுகூட எனக்கு இல்லாமல் போய்விட்டதே? அதற்குத்தான் எத்தனே விவேகம் இருந்தது? ஒரு மகா புருஷனின் பெயரைச் சூட்டியதன் விசேஷமோ அது ? . "மரணக் கிணறே போ!' என் செளந்தரம் எங்கே? தன் தாய்மையில் இடி விழுந்து துடிக்கும் என் துணைவி எங்கே? ஆருகப் பெருகும் அவள் கண்கள் எங்கே? துடைக்க ஆளில்லாமல் நீர்த் திரை படர்ந்துவிட்ட அவள் முகம் எங்கே? ஆயிரம் கேள்விகள் என் கால்களை ஊக்கின. என் கண்ணிரையும், அறியாமையையும் அறிவின் நிறைவையும் ஒரேயோர் அலறலில் புரிந்துவிட்ட ஒர் அதிசயக் க ன வி ன் பொருளில் முழக்கினேன் : ** செளந்தரம்...!". -