பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 புதிர் வேங்கடலட்சுமி படுக்கையில் புரண்டு படுத்த பட்டுவை அத்தையின் கீச்சுக் குரல் தட்டி யெழுப்பியது. கண்களைக் கசக்கி விட்டுக்கொண்ட குழந்தை ஒன்றும் விளங்காமல் நாற்புற மும் நோக்கி விழித்தாள். அத்தை பாகீரதிக்கு அவள் விழிப்பதைக்கண்டு சிரிப்பு வந்தது.

  • என்னடி பட்டு ? அப்படி விழிக்கிருயே? இன்றைக் குச் சாவித்திரி அக்காவுக்குக் கல்யாணமல்லவா ? எல்லா ரும் எழுந்து குளித்துத் தயாராகிவிட்டார்கள். நீ மாத்திரம் இன்னும் தூங்கிக்கொண்டே யிருக்கிருயே. எழுந்திரடி சீக் கிரம்!”

ஒரு விடிை திகைப்புடன் மலர விழித்த குழந்தைக்குச் சட்டென்று ஒரு விஷயம் ஞாபகம் வந்தது. ஆமாம். அக்காவுக்குக் கல்யாணம் ; அதுதான் ஏழெட்டு நாளாக வீட்டிலே வருவோரும் போவோருமாய் ஒரே அமர்க்களமா யிருக்கிறது. அத்தை கூப்பிடுவதைக் காதிலேயே வாங்கிக் கொள்ளாமல் எழுந்து ஜன்னலண்டை ஓடினள்.