பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

169


நடந்த தன் கல்யாண அனுபவத்தை விவரிக்க ஆரம்பித்து விட்டாள். சாவித்திரி ஒன்றும் பேசாமல் பொம்மைபோல் உட் கார்ந்து கொண்டிருந்தாள். அவள் ஏன் அப்படி இருந்தா ளென்பது பட்டுவுக்கு விளங்கவே யில்லை. சதா சிரிப்பும் விளேயாட்டுமாகவே கலகலவென்று இருக்கும் அக்கா இப் பொழுது ஏன் என்னவோ மாதிரி பேசாமலிருக்கிருள் ? கல் யாணம் அவளுக்குப் பிடிக்கவில்லையா ? அன்றைக்கு வந்தாரே, உயரமாய்ச் சிவப்பாய், அந்த மாமாவைத்தானே அவள் கல்யாணம் பண்ணிக்கொள்ளப் போகிருள்? அவருக் கென்ன, நன்ருய்த்தானே இருக்கிருர் ? ஆலுைம் பட்டுவுக் கென்னவோ, அவரைப் பார்த்ததிலிருந்தே பிடிக்கவில்லை. கல்யாணம் ஆனவுடனேயே சாவித்திரியை அவர் அழைத் துக் கொண்டு போய் விடுவாரென்று அம்மா சொன்னள். பட்டுவின் வெறுப்புக்கு அதுதான் காரணம். சாவித்திரியைச் சுற்றியிருந்த கூட்டம் கொஞ்சம் கலந் தது. அறைக்கு வெளியே நின்றிருந்த குழந்தையைக் கண்டாள் அவள். புன்சிரிப்புடன் சைகைகாட்டி அவளேத் தன்னிடம் வருமாறு அழைத்தாள். - ஒட்டமாயோடி அவளுடைய மடியிலேறி உட்கார்ந்து கொண்டாள் பட்டு. - காதோடு கேட்டாள். அக்கா, நீ சொஜ்ஜி சாப் ! ! ! ! ! : " சாப்பிட்டேனடி கண்ணே.” என அவளே அனைத்து முத்தமிட்டாள் சாவித்திரி. ஏனே அவள் கண்ணில் மள மளவென்று நீர் நிறைந்தது. - பார்த்துக் கொண்டேயிருந்த பட்டுவுக்கும் அழுகை வந்துவிட்டது. சட்டென்று சட்டைமுனையால் கண்ணேத் துடைத்துக் கொண்டாள். : . . . . .. ' வெகு நன்றயிருக்கிறது அசடுகள் மாதிரி அழுவது. கண்ணத் துடைத்துக் கொள்ளுங்கள்,” என்று பக்கத்தி லிருந்த வயதான அம்மாள் அதட்டினள்.