பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170


அனேகமாக அறையிலிருந்த எல்லாருமே கீழே போய் விட்டார்கள். மிகுதியிருந்த இரண்டொருவரும் கீழே இறங்கிப் போக எழுந்து கொண்டிருந்தார்கள். அக்காவை அழைத்துப்போக அம்மா வருவாள். அப் புறம்தான் அவள் கல்யாணப்பந்தலுக்குப் போகவேண்டும். இந்தச் சந்தர்ப்பம் பட்டுவுக்கு அக்காவிடம் பேசுவதற்குச் சாதகமாயிருந்தது.

  • அக்கா, நீ நாளைக்கே அந்த மாமாவுடன் ஊருக்குப் போய் விடுவாயா?”

அழுகையிலும் சிரிப்பு வந்தது சாவித்திரிக்கு. " இல்லே, கண்ணு. இன்னும் இரண்டு நாள் கழித்துத் தான் போவேன்.” " அப்புறம் எனக்கு யார் தலை பின்னுவார்கள் ? யார் சாதம் போடுவார்கள் ? ராத்திரி நான் யாரிடம் தூங்கு வேன்?" என்று பலவிதமான கேள்விகளை அடுக்கிள்ை பட்டு. கேட்டுக்கொண்டேயிருந்த சாவித்திரிக்கு மீண்டும் கண் கலங்கியது. குழந்தை சொல்லுவது உண்மை தான். பட்டு பிறந்தவுடன் அவளுடைய அம்மா நோய் வாய்ப் பட்டுப் படுக்கையில் விழுந்து விட்டாள். சுமார் ஒரு வருட காலம் வரையிலும் வீட்டுப் பொறுப்பும், பச்சைக் குழந் தையான பட்டுவைப் பராமரித்து வளர்க்கும் பொறுப்பும் மூத்த பெண்ணுன சாவித்திரியின் தலையில் விழுந்தது. பன்னிரண்டு வயதே ஆகியிருந்தபோதிலும், தன் மீது சுமத்தப்பட்ட அப்பொறுப்பைத் திறமையாக ஏற்று நடத் தினுள். . "அக்கா, அக்கா" என்று எதற்கும் சாவித்திரியையே நாடலானுள் பட்டு. இந்த வழக்கம் ஆறு வயதான பிறகு கூட அவளைத் தொடர்ந்தே வந்தது. இக்காரணம் பற்றியே சாவித்திரியின் கல்யாணப் பேச்சு ஆரம்பமானதிலிருந்து அக்குழந்தையின் மனத்தில் ஒரு வகையான வேதனே யுண்டாகி வருத்திக்கொண்டே யிருந்தது. சாவித்திரியைப்