பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 í பெண் பார்க்க வந்த தினம் ஒரு சம்பவம் நடந்தது. அதை அக் குழந்தையின் பளிங்கு மனம் மறக்கவே யில்லை. அன்றைய தினம் வீட்டில் ஏற்பாடுகளெல்லாம் பலமா யிருந்தன. கூடத்தில் பட்டுப் பாயெல்லாம் விரித்துப் பாக்கு வெற்றிலே பழமெல்லாம் எடுத்து வைத்திருந்தார்கள். சாவித்திரியை நன்ருக அலங்கரித்து மாடியறையில் உட்கார வைத்திருந்தார்கள். கூடவே இருந்த அவளுடைய தோழி கமலி, அவளைப் பலவிதமாகக் கேலிசெய்துகொண் டிருந்தாள். சாவித்திரி எல்லாவற்றையும் கேட்டபடி மெளனமாக உட்கார்ந்து கொண்டிருந்தாள். அவள் முகத்தில் மட்டும் லேசான புன்சிரிப்பொன்று இழையோடிக் கொண்டிருந்தது. இச்சந்தர்ப்பத்தில் கீழிருந்து அப்பாவின் குரல் கேட்டது, “ சாவித்திரி ! இங்கே வந்து இவர்களையெல்லாம் நமஸ்காரம் செய், அம்மா ?” அவசரமாக எழுந்த சாவித்திரி, கமலியுடன் கீழே போளுள். கூடத்துக்கு வெளியே கையில் ஒரு புதிய ரிப்பனுடன் காட்சியளித்த பட்டு, " அக்கா ! எனக்குத் தலை பின்னிவிடு ' என்று அவளுடைய புடவையைப் பிடித்து இழுத்தாள்.

  • நல்ல சமயம் பார்த்தாயடி, தலே பின்னுவதற்கு! அம்மாவிடம் போய் பின்னிவிடச் சொல்லு,’ என்று அவளே ஒரு கையால் ஒதுக்கிவிட்டு, இன்னெரு கையால் சாவித்திரி யிடம் வெற்றிலத்தட்டை எடுத்துக் கொடுத்தாள் கமலி.

குழந்தைக்கு ஒன்றும் விளங்கவில்லை. அக்காவுக்கு என்ன வந்துவிட்டது? தினமும் அவள்தானே தனக்குக் குளிப்பாட்டி, தல பின்னி, எல்லாம் செய்வாள்? துக்கம் அவள் நெஞ்சை அடைத்துக் கொண்டது. குழந்தைக்கு ஒன்றுமே பிடிக்கவில்லை. கையிலிருந்த ரிப்பனைத் தூர, எறிந்துவிட்டு மாடிக்குப் போய்ச் சாவித் திரியின் கட்டிலில் குப்புறப் படுத்துக்கொண்டாள்.