பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14


வேண்டும் என்பதற்காகத்தான் !......ராத்திரியில், கடைசி ரயில் ஊதிவிட்டுப் போய் அரைமணி நேரம் ஆகிறவரை யிலும் வாசற் கதவைத் தாளிட மாட்டேன். அவன் வந்து வீட்டு வாசலில், தாழ்ப்பாளேத் தள்ளிக் கதவைத் திறக்கிற வரையிலும், காத்துக் கொண்டிருப்பதை என்னுல் சகிக்க ** . ه. • .. هه. لقيT للاجtp) பத்து நிமிஷம் கற்சிலேபோல் அமர்ந்திருந்து விட்டு வெறுங்கையுடன் திரும்பினர், கிட்டா மாமா. காலம் கடுகிச் சென்றது. கனகத்தின் உடல் தளர்ந்து கொண்டே வந்தது; உள்ளத்தில் பலம் ஏறிக் கொண்டே போயிற்று. கிராமத்தினருக்கு அவளுடைய போக்கு பிடிபடவில்லை. ஆளுல், அதைப் பற்றிக் கனகம் கவலைப்பட்டாளா? எப் போதும் போல்தான் மற்றவர்களுடன் பழகினுள். வீட்டை த் தேடிவரும் பெண்களுடன் சந்தோஷமாகப் பேசினுள். தன் வாழ்வில் எவ்விதக் குறையும் இல்லாத வளைப்போல், நிறைந்த வாழ்க்கையை அனுபவித்து விட்ட வ8ளப்போல் கலகலப்பாகப் பழகினுள். துரையைப் பற்றிக் கூட மற்றவர்களிடம் தானகப் பேசி அவர்களுள் வெறுப்பை உற்பத்தி செய்வதில்லை ! வேலைக்காரி தினமும் காலையில் வருவாள். இயந்திரம் போல் வீட்டுக் காரியங்களைச் செய்வாள். கொல்லைத் தோட்டத்திலிருந்து புதிதாகக் கறிகாய் பறித்துக் கொடுப் பாள். இரவு ஏழு மணிக்கு வீட்டுக்குத் திரும்புகையில் சோறும் கறியும் குழம்பும் எடுத்துச் செல்வாள். எல்லாம் துரைக்காகச் செய்தவை! வெளி விவகாரங்களைக் கண்ணப்பன் நிர்வகித்தான். கனகத்திடம் உண்மையான அனுதாபம், அவனுக்கு. எசமானியின் மனம் கோணுமல் நடப்பான். " சின்ன எசமான் இருந்தாருன்கு, எவ்வளவு நல்லா இருக்கும்? என்று அவன் வருந்தாத நாளே இல்லை.