பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

選5 சிவன் கோவிலைப் பழுது பார்க்கக் கனகம் பணம் கொடுக்காததனுல் கிட்டா மாமாவுக்கு அவளிடம் வருத்த மில்லை. அவளுக்கிருந்ததைப் போன்ற நெஞ்சுத் திடத்தை அவர் வேறு எந்தப் பெண்மணியிடமும் கண்டதில்லை. கனகத்திடம் பேசிவிட்டு வந்தபின், ' என்றேனும் ஒரு நாள் துரை வந்தாலும் வரலாம் என்ற எண்ணம்கூட அவரிடம் இலேசாகத் தோன்றவாரம்பித்தது.

  • ’ எனக்கென்னமோ, துரை வந்துடுவான் என்றே படு கிறது ”” என்று, அண்டை வீட்டுக் குப்புசாமியிடம் சொன்னர்.

அவர் சிரித்தார். " போங்கோ, மாமா!......இந்த ஜன்மத்திலே நடக்கிற காரியமா? தீவாந்திர சிட்சை என்கிருப்பிலே இருபது வருஷம் ஓடிப் போயிடுத்தே!...” மாமாவுக்குக் குப்புசாமியின் பேச்சை மறுக்க வேண்டும் போலிருந்தது. என்ருலும் தன் முடிவுக்குக் காரண காரியம் ஏதுமில்லை என்பதை அவரே உணர்ந்தார். ஆக்வே தலையை அசைத்து விட்டுப் பேசாமல் இருந்தார். எதிரே கண்ணப்பன் வந்து கும்பிடு போட்டான். என்னப்பா? என்ருர், மாமா.

  • அம்மாவுக்கு உடம்பு சொகமில்லீங்க......”*

அருணசலத்து வீட்டு அம்மாவுக்கா?”

ஆமாங்க. ஒரு மாசமாவே ரொம்ப பலஹீனம். இன் றைக்குக் காலேயிலேருந்து எளுந்திருக்கவே இல்லிங்க..."

கக் ساہیے Gبا !...என்ன உடம்பு ? ஜூரமா ?” “ அதெல்லாமில்லங்க. வயசாயிடிச்சு. சரியான சாப் பாடு இல்லே. மனேவியாதி....." விசாரிக்கச் சொல்றேன்.' -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிறுகதைக்_கோவை.pdf/21&oldid=830346" இலிருந்து மீள்விக்கப்பட்டது