பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 6 கண்ணப்பன் நகர்ந்ததும் தன் பேத்தி சரோஜாவை அழைத்துக்கொண்டு கனகத்தின் வீட்டுக்குச் சென்ருர், கிட்டா மாமா. " எனக்கு ஒண்ணுமில்லே மாமா ரொம்ப அசதிமாதிரி இருந்தது. படுக்கையிலேயே கிடந்தேன். கண்ணப்பன் பயந்து விட்டான் போலிருக்கு !...” " சரோஜா வேணுமாளுல் இங்கே இருக்கட்டுமா ? கூடமாட ஒத்தாசை செய்வாள்......”

  • இப்போ எனக்கு என்ன வந்து விட்டது ?......வேணு மானுல் சொல்லி அனுப்புகிறேன்!”

உலர்ந்து நின்ற அவளைப் பரிதாபத்தோடு பார்த்து விட்டு வீட்டுக்குத் திரும்பினர், மாமா. அன்றைய தினம் சமையலுக்காக அடுப்பு மூட்டு கையில், முற்றத்தில் காகம் கரைந்தது. ராஜபவனியின் போது, எல்லாவற்றுக்கும் முன்னதாக சுபச்செய்தியைத் தெரிவிக்கும் சங்கொலிபோல் கனகத்தின் செவிகளில் கேட்டது, அது. ஒடோடி வெளியே வந்து பார்த்தாள். முற்றத்தில் வெள்ளை எச்சம் ! கனகத்திற்கு உடல் பலஹீனம் பறந்து விட்டாற் போலிருந்தது. கொல்லைப் புறத்திற்குப் பாய்ந்து சென்று கீரைப் பாத்தியில் கைகளே ஒட்டினுள். பகல் மறைந்து இருள் விரிந்தது. துரை வரவில்லை. வேலைக்காரி வீட்டுக்குப் போய்விட்டாள். பின்கட்டுக் கதவுகளைத் தாழிட்டுக்கொண்டு முன்பக்கத்து அறைக்கு வந்தாள், கனகம். வாசற் கதவைச் சாத்தியபோதுதான் தன் உள்ளச் சோர்வை அவளால் உணர முடிந்தது. இடை கழியிலேயே சிறிது நேரம் தயங்கி நின்ருள். பின், அறைக் குள் படுக்கையில் படுத்தபோது உடல் நிலைகொள்ளவில்லை; புரண்டாள். இந்த மண்ணுலகத்துடன் அவளைப் பிணைத் திருந்த ஏதோ ஒன்று அவளிடமிருந்து நழுவிக் கொண் டிருப்பதாகப் பட்டது. கடைசி ரயில் வருகிற நேரம்தான். சற்றைக்கெல்லாம்.வாசற் கதவைத் தாளிட வேண்டுமே!’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிறுகதைக்_கோவை.pdf/22&oldid=830348" இலிருந்து மீள்விக்கப்பட்டது