பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 சண்பகம் யாரோ, என்ன சொல்லக்கூடியவளோ, தெரியாது. ஆனல் அந்த நினைவில்ை இருவரும் சிரித்துக் கொண்டார்கள். "கொஞ்சம் தல சிவிக்க முடியுங்களா ?” ' அந்த ருமுக்குப் போங்க.” கேட்டவள் பெண் தான். ஆளுல் கூடவே அவனும் சென்ருன். இது சீக்கிரத்தில் முடியாதென்று மாணிக்கத் துக்குத் தெரியும். நிதானமாக ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்துக்கொண்டு உட்கார்ந்தான். அலங்கார அறையிலிருந்து பேச்சும் சிரிப்பும் கேட்டன. சிறிது நேரத்தில் தம்பதி வெளியில் வந்தார்கள். மாணிக்கத் துக்கு அவர்கள் தோற்றத்தில் எந்த முன்னேற்றமும் தெரிய வில்லை. அவர்கள் கண்களுக்குத்தான் தெரியும் போலும். கணவனின் அருகில் ஒரு சிறு பலகையை வேலைக்காரப் பையன் கொண்டு வந்து போட்டான். மனைவி அதன்மேல் ஏறி நிற்கவும் உயரம் சமமாகியது. முதலில் அப்படியே படம் எடுத்துக் கொண்டார்கள். பிறகு " இன்னும் ஒரு போஸ் : ஸார் !’ என்றவாறு அந்த வாலிபன் மனைவியின் கையைப் பிடித்துக் கொண்டான். “ ஸார், அந்த முதல் போட்டோவை நான் கொடுத்த வீட்டு விலாசத்துக்கே அனுப்பிச்சிடுங்க. அப்புறம்...வந்து. அந்த ரெண்டாவது போலை”...இந்த விலாசத்துக்கு அனுப்பறீங்களா ?’’ தயங்கித் தயங்கி வெட்கத்துடன் வாலிபன் இன்னெரு விலாசம் கொடுத்தான். அது அவனது காரியாலய விலாசம். கையைப் பிடித்துக் கொண்டிருக்கும் காட்சி வீட்டிலுள்ளவர்களுக்கல்ல, அவர்கள் இருவருக்கு மட்டும்தான். ' ஆகட்டும் ஸார். அப்படியே அனுப்பறேன்.” அவர்கள் போளுர்கள். வேறு பலர் வந்தார்கள். ஒரே இயந்திர ஒழுக்கம். அவனும் அதில் ஒரு விசை, மாணிக் கத்துக்கு அலுப்பாயிருந்தது. இந்த மேல் ஒட்ட நிலையைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிறுகதைக்_கோவை.pdf/29&oldid=830362" இலிருந்து மீள்விக்கப்பட்டது