பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24


தவிர அவன் தொழிலில் ஆழத்துக்கு ஒரு நிமிஷம்கூட இட மிருக்காதா? பெரிய கும்பல் வந்து அறையை ஆக்ரமித்தது. மாணிக்கம் ஒரு கணம் திகைத்துப் போய்விட்டான். ' குழந்தையைப் படம் எடுக்கனுங்க. நல்லா எடுப் பீங்களா ? - ஆண்களும் பெண்களுமாய்ச் சூழ்ந்திருந்த அந்தக் கூட்டத்துக்கு நடுவே மாணிக்கம் ஒரு சின்ன குழந்தை யைச் சிரமப்பட்டுக் கண்டு பிடித்தான். “ எடுக்கறேனுங்க. பையா, அந்த மேஜையைக் காமிரா வுக்கு எதிரே இழுத்துப்போடு. குழந்தையை மேஜை மேலே விடுங்க.” 'மூணு மாசத்துப் பிள்ளே இது. குழந்தை மிரண்டு போகாமே பிடிக்கணும்.’’ மாணிக்கம் கோபத்தை அடக்கிக்கொண்டு மேஜை மேல் ஒரு விரிப்பைப் போட்டான். " ம், குழந்தையை விடுங்க.” குழந்தை மேஜைமேல் விடப்பட்டது. ' கண்ணுக் குட்டி, எங்கே சிரி ?’ யாரோ கொஞ்சிஞர்கள். "பட்டுச் சொக்காய் போட்டிருக்குதே, அது படத்திலே நல்லா விழுங்களா?” - 'உம், விழும், விழும்.’’ "அதிலே இருக்கிற பூவேலை கையாலே செய்தது. அது நல்லாத் தெரியணும். சொன்னவளின் குரலிலிருந்து பூ வேலை செய்தவள் அவள்தானென்பது வெட்ட வெளிச்சமா யிருந்தது. 'பாபு, சிரிடா கண்ணு! அதோ காமிராவைப் பாரு !’ "படம் பிடிச்சு குழந்தையின் தகப்பளுருக்கு அனுப் பணும். நல்லாப் பிடியுங்க. - மாணிக்கத்துக்குத் தாங்கவில்லை.