பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25


' குழந்தையின் பாட்டளுரே பார்க்கனும்குக்கூட நல்லாயிருக்கும்படி பிடிக்கிறேன். கொஞ்சம் எல்லாரும் விலகிப் போங்க.” " அப்புறம் குழந்தை அழுமே!’ " அப்போ அதை வெச்சுக்கிட்டு எல்லாருமா உக்காந் துக்குங்க.” " ஐயய்ய, வேணும்.' எல்லோரும் விலகினர்கள். ஆளுல் பேசுவதை நிறுத்த வில்லை. ' கண்ணு, இதோ பாரு!” " சிரிடா ராஜூ ??? " காமிராவைப் பார்த்துப் பயப்படுது அது!” " சிச்சிச்சிச்சிச்சி......" சப்தமிட்டார் ஒருவர். 'இதோ பாரு? ஊஊஊ......” குழந்தை சிரிப்பதற்காக முகத்தைக் கோணிக் கொண் டாள் ஒருத்தி. "டக்கு டக்கு டக்கு!” ' த்லொ த்ஸ்ொ த்ஸொ !” இந்த இரைச்சலிலும் பட்டுச் சொக்காயின் புழுக்கத் திலும் குழத்தை மிரள விழித்து அழ ஆரம்பித்தது. சிரிப்பு வந்தது. மாணிக்கத்துக்குத்தான். குழந்தை கிடக்கட்டும், அதைச் சிரிக்க வைக்க முயலும் பெரியவர்கள் செய்து கொள்ளும் முக விகாரங்களே யெல்லாம் படம் பிடித்தால் எவ்வளவு நன்ரு யிருக்கும் என்று எண்ணினன் அவன். ' ஐயோ, அளுவுதே பிள்ளை!” " நான் அப்பவே சொன்னேன், பழரசம் கொடுத்து எடுத்து வாங்கன்னு, யாரு கேக்கருங்க என் பேச்சை.” " அது ஒண்னுமில்லே. தூக்க சமயம் அதுக்கு. விடியற்காலயே வேறு முழிச்சிக்கிட்டுதா ?”

  • அதுதான் நேத்து சாயந்திரம் பூரா தூங்கிச்சே!”