பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27


கவலை மிகுதியில் தாய் தன்பாட்டில் சொல்லிக்கொண் டிருந்தாள். ஓர் அன்னியனிடம் சொல்கிருேமென்ற நினைப்பே இல்லை. மீண்டும் படமெடுக்கும் வேதனை. ' கொஞ்சம் திரும்புங்க, இன்னும் சிரியுங்க.” மகளின் சேலேயைத் தாய் அக்கறையோடு தடவி, ஒவ்வொரு இடத்திலும் ஜரிகைக் கரை முழுவதும் தெரியும் படியாய் விரித்து விட்டாள். கழுத்து ஆபரணத்தைச் சேலைக்கு வெளியே இழுத்துப் பொருத்தினுள். அது மட்டு மல்ல. தாயின் கரமல்லவா? படத்தில் விழாத பாகம் என்ற உணர்வு இன்றிப் பின்னல் சென்று மகளின் தலையிலிருந்த பூவைக் கூடக் குவித்துச் சரிப்படுத்தினுள். படம் நல்லா வருமில்லே? சரஸ்ா அழகா விழனும். கொஞ்சம் பார்த்துச் சரி செய்யணும்னலும் செய்யுங்க.” இப்படி ஒருவகை. அடுத்த நாள் வேருெருத்தி வந்தாள். சேலைக்குமேல் கறுப்பு அங்கி: கையில் சதுரமான கறுப்புத் தொப்பி; ஒரு காகிதச் சுருள்; பரீட்சை தேறியவள், கான்வகேஷன்” உடையில் தன் வித்தைப் பெருமிதத்தை விளக்கிட்டு வைத்துக்கொள்ள வந்திருந்தாள். " பின்னுல் ஸ்க்ரீன் அம்மா ?” " சித்திர ஸ்க்ரீன் ஒண்னும் வேண்டாம். ஸிம்பிளாக ஒரு துணி போடுங்க, போதும் ’’ கையில் தேர்வுப் பத்திரத்தைப் பிடித்துக்கொண்டு, பூக்கிண்ணம் ஏந்திய மேஜைமேல் முழங்கையைப் பதித்த வளாய்ச் சற்று மேல் நோக்கிய பார்வையுடன் நின்ருள் அவள். அதுதான் படிப்புப் பார்வை என்ற எண்ணம். கறுப்புக் குல்லாய் அவள் தலைமேல் கோமாளித் தனமாய்க் காட்சியளித்தது. ஆனல் அவள் பெருமையாய்த்தான் நின்ருள். இனி அந்தப் பத்திரத்தைத் தொலைத்தாலும் இந்தப் படத்தைத் தொலைக்க மாட்டாள். தன் வித்தை