பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28


யைப் பறைசாற்றும் ஓர் ஆடம்பரச் சாதனமல்லவா அது ? நல்ல வித்தை அடுத்த வருஷம் எவனுக்கோ கழுத்தை நீட்டி, வீடு எங்கே வம்பு எங்கே என்று அழப்போவதற்கு இது ஒரு படியா ? என்ன படிப்பு ! எல்லாம் வெளி ஜம்பத் துக்காக. அடுத்ததாக வந்த ஆளும் மாணிக்கத்தின் எரிச்சலேக் குறைக்க உதவவில்லை. பாலிஷ் ஜோடுகள் அணிந்த பாதங்களிலிருந்து, க்ரீம் சுடர் விடும் கலையாத கேசம்வரை நாகரிகத்தில் திளைக்கும் அலங்காரத்துடன் ஒர் இளைஞன். படம் என்னவோ மார்புவரைதான் எடுத்துக் கொள்ளப் போகிருன். பெரிய சுங்க அதிகாரியின் மகளும். பூ பரா மரிப்புத் துறையில் மேற்படிப்புப் பெற அமெரிக்கா செல்கிரு ளும். இந்த விஷயம் எல்லாப் பத்திரிகைகளிலும் அவனது புகைப்படத்தோடு விளம்பரம் ஆகப்போகிறதாம். இவன் அப்பாவை முதலில் யார் கண்டார்கள் ? இவன் என்ன பயிற்சிக்காக எங்கே போனலென்ன, போகா விட்டால் என்ன? என்னவோ பொதுஜனங்கள் இதே சிந்த னேயில் தூக்கமின்றிக் கவலைப்படுவதாக ஒரு பிரமை. படம் நல்லா வரணு:ங்க, "டிப்டாப்பா இருக்கணும். லேட் பத்திரிகையில்கூட வெளியாகப் போவுது. பாஸ் போர்ட்’ அளவு.”

  • 守f 6mの町舟。"

ஒருவாறு அந்த ஆளும் வெளியேறிய பிறகு, மாணிக்கம் தன் கைக் குட்டையால் முகத்திலிருந்த வியர்வையையும் புன்னகையையும் வழித்தெறிந்தான். உஸ்! என்ன போலி வாழ்க்கை! ஆடம்பரம், அழகு உருவம், சீ! கடிகாரத்தில் மணி ஆறடித்தது. ஸ்டுடியோவை மூடிச் சற்று நிம்மதி அடைவதென்பது உண்டா? சின்ன ஸ்டுடியோ. அவனே முதலாளி, அவனே படம் பிடிப்பவன். ஆலுைம் இன்று மனம் மிகவும் அயர்ந்து போயிருந்தது. வாயில் ஒரு சிகரெட்டுடன் வாசலுக்கு வந்தான்.