பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 O. எத்தனையோ நாளாக இருந்த எரிச்சலெல்லாம் இன்று பேச்சில் வெடித்துச் சிதறியது. ' குழந்தையை மட்டும் தான் படம் எடுக்கணும்.’’ * அப்படிங்களா ? அப்போ மேஜை மட்டும் போதும். பையா, மேஜையை இழு.” இதற்குள் தாயார் வெளியே வந்து விட்டாள். கைகளில் அனைத்துப் பிடித்திருந்த குழந்தைக்குத்தான் தலே வாரிச் சீர் செய்திருந்தாள், தனக்கல்ல. 'குழந்தையை மேஜைமேலே விடுங்கம்மா. உட்காருகிற குழந்தையா? ரைட் கையிலே ஏதாவது சாமான் கொடுக்க லாமா? அப்போ குழந்தை இன்னும் அழகா விழும் படத்திலே.”

  • எப்படி விழுந்தாலும் சரி அம்மனிதன் மெதுவாகப் பேசினன். ' எங்க குழந்தைக்கு வைத்தியம் இல்லாத ஒரு அபூர்வ ரத்த வியாதி. இன்னும் ரெண்டு மாசம்தான் தாங்கு மாம். அதுக்காகத்தான்...ஒரு படம் எடுத்து வச்சிட்டா எப்பவும் பார்த்துக்கிட்டே இருக்க முடியுமில்லே......”

மாணிக்கத்தின் வாயிலிருந்து சிகரெட் தானே நழுவி விழுந்தது. தான் திடீரென்று தெய்வ சன்னிதானத்தில் நிற்பதாக உணர்ந்தான் அவன், அந்த மகத்தான துயரத் தின் முன்னே. உலகத்தில் இதயமில்லாத இடமே இல்லை ! ஆடம் பரத்துக்கெல்லாம் நடுவே ஒர் ஆழமான உணர்ச்சியா ! செயற்கைகளுக்கெல்லாம் இடையில் இந்த இடத்திலும் ஓர் உண்மைத் தாபமா..! இதயமற்ற விளம்பரமாய் இருந்த தொழில் இப்போது இரண்டு உள்ளங்களின் கரைகாணுச் சோகத்தைத் தாங்கித் தடவிக் கொடுக்கும் ஒரு புனிதத் தாயகமா ! - அவன் பணிவாகி, பக்தியாகி, உறைந்து விட்டான். விம்மலோடு குழந்தையை மேஜைமேல் இருத்தி விட்டுத் தாய் விலகியபோது அவன் வெறும் விசையாய் இல்லை. மனிதனய் மாறிக் காமிராவை நோக்கிச் சென்ருன். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிறுகதைக்_கோவை.pdf/36&oldid=830379" இலிருந்து மீள்விக்கப்பட்டது