பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3統 சிரிப்பின் சுவடிே கிடையாது. அந்த நரகத்திலிருந்து விடுபடலாமென்று இங்கே வந்தால், அதற்கு மேல் வேதனே பொறுக்க முடியவில்லை. யாருக்காவது அவளுடைய மனது புரிகிறதா ? யாரை தொந்து கொள்வது ? விதி : எல்லாம் விதி ! அப்பா கூட வீட்டில் இல்லை. அவசர காரியம் வந்து விட்டதாம். பெண் வருகிருளே. அதுவும் ஆயிரம் மைலுக்கு அப்பாலிருந்து வருகிருளே ’ என்கிற பாசம் இருக்காதோ ? இருந்தால் போவாரா ? எல்லோரும் யந்திர மாக இருக்கிருர்கள். அவளுக்கு அப்படி இருக்கத் தெரியாத குறைதான் இத்தனை சங்கடங்களுக்கும் காரணம். வாசலுக்கு வந்தாள். மழை பெய்து படிந்திருந்த தெருவில் ஒரு மாறுதலும் இல்லை. அன்று போல் இன்றும் மேலக் கோடிப் பெருமாள் கோவிலிலிருந்து, கீழ்க் கோடி ஈசுவரன் கோவில் வரை மேனி மழுங்காது நீண்டிருக்கிறது. உலகத்தில் எத்தனை மாறுதல்கள் ஏற்பட்டால்தான் என்ன, இந்த ஊரை ஒன்றும் செய்துவிட முடியாது! காற்றைக் கூடக் காணுேம். அதன் மென்னியை யாரோ பிடித்துத் திருகிவிட்டதைப் போல அசைவற்றுக் கிடந்தது. காலைக் கதிரவன் உமிழ்ந்த கதிர்கள், தெருவில் தேங்கியிருந்த நீரில் விகாரமாகப் பளபளத்தன.

  • யாரடி அலமுவா !”

பக்கத்து வீட்டுத் திண்ணே குரல் கொடுத்தது. அலமு பார்த்தாள். பத்து வருஷத்துக்கு முன்பிருந்த மேனிக் கட்டு சற்றும் தளராது அம்புஜம் நின்ருள். " ஆமாம், மாமி.........” " எப்போ வந்தே?” "காலையில்தான்.”

  • & நான் കുഖങ്ങ4്പേ இல்லையே. ......இங்கே இதுகள் போடற இரைச்சலிலே என்ன காதிலே விழறது?........... உடம்புக்கு ஒன்றுமில்லாமல் இருக்கிருயா ? ’
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிறுகதைக்_கோவை.pdf/41&oldid=830391" இலிருந்து மீள்விக்கப்பட்டது