பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36


'உம்' என்ருள் அலமு. இதுகள்’ என்று அம்புஜம் குறிப்பிட்டது அவளது அளவற்ற சந்தான பாக்கியங்களைத் தான் ! காலணு அகலத்துக்கு நெற்றியில் பொட்டிட்டுக் கொண்டு, எப்போதும் ரெடிமேட் சிரிப்புடன், வயிறு: குலுங்கப் பேசும் ஹாஸ்யமுமாய்த் துலங்கும் அவளிடம், எப்போதும் அலமுவுக்குப் பொருமை. எட்டுக் குழந்தை களையும் சமாளித்துக் கொண்டு இவளால் சிரித்துப் பேசவும் முடிகிறதே! ' உங்களவர் வந்திருக்காரா ?”

  • இல்லை, நான் மட்டும்தான்.” ' ஆமாண்டியம்மா, ஒரு தடவை வந்துவிட்டுப் போற துன்னு லேசிலே இருக்கா ? எண்ணி ரெண்டு பச்சை நோட்டை எடுத்து வைக்க வேண்டியிருக்கே............... தவிரவும் ஆபீஸ்காரா நெனேச்சபடி வரத்தான் முடியுமா ? .........சாவகாசமா வீட்டுக்கு வாயேன்.........அடுப்பிலே தீஞ்சு போயிடும்...வரேன்” என்று அம்புஜம் விடை பெற்றுப் போளுள்.

ஆபீஸ்காரர்கள் என்ருல் கிராமத்திலிருப்பவர்களுக்குத் தேவலோகத்துப் பதவி என்று கற்பனை போலும் ! ஏன், முதலில் அலமுவே அப்படித்தானே எண்ணிக் கொண்டிருந்தாள். அதுவும், நம் தேசத்தவர்களுக்கு வடக்கே வேலை பார்க்கிற மாப்பிள்ளை வாய்த்துவிட்டால், தலை கால் தெரிவதில்லை ! அலமுவின் கணவன் வேலை பார்த்த இடம், இரும்புத் தொழிற்சாலைகள் புதிதாக நிர்மானமாகும் பகுதியில் அமைந்திருந்தது. சுற்றிலும் செம்மண் காடு. புல், பூண்டு மருந்துக்குக் கூடக் கிடையாது. அதுகூட அவளுக்குப் பெரிய ஏமாற்றமல்ல. காடு புதரில் வசித்தால் ةa وسا அன்பான கணவனின் இன்சொல் அதைத் தெய்வலோக மாக்கி விடாதா? ஆளுல் அவளது கணவன் பத்மனபனே, ஆபீஸைத் தலையில் தாங்குபவனேப் போல, மணமானது முதல், இன்றுவரை