பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3S அவள். உடற் புண்ணுல் மனப் புண்ணே அதிகமாக்கிக் கொள்வதைத் தவிர, அங்கே குளிர் நிலவுக்கோ, உதயத்தின் மலர்ச்சிக்கோ அர்த்தமே கிடையாது. என்ன வாழ்க்கை ! அம்புஜம் தான் இருக்கிருள். அலமுவைவிட ஏழெட்டு வயது மூத்தவள். இருந்தும், இப்போது பார்த்தாலும், புது மணப் பெண் போலப் பொலிவு துலங்குகிறது. மணமாகி ஆறு ஆண்டுகள் ஆகியும், இன்னமும் ஒற்றை மரமாக நிற்கும் தனக்கும், அம்புஜத்துக்கும் எத்தனே வேறுபாடு ! சரேலென்று உள்ளே வந்தாள் அலமு. தலே கனத்தது. படுக்கையில் விழுந்தாள். துயரம் அடக்கக் கூடியதாக இல்லை. பொங்கிப் பொங்கி விம்மிஞள். “ என்னம்மா, என்ன?’ என்று ஓடோடி வந்தாள் கனகம். அலமு பதில் சொல்லவில்லை. அவளது தலே மயிரைக் கோதியபடி, ஆதுரத்துடன் மூச்சடைக்க நின்ருள் கனகம், பேச வாயற்று. இதற்கு விமோசனம் இல்லையா? இப்படியே எத்தனை நாள் வாழ்வது? பொக் கென்று ஒரு கணத்தில் பிராணன் போய் விட்டாலும் தேவலேயே! 裘森 எழுந்திருந்து குளித்து விட்டு வசம்மா.........பிள்ளைத் தாச்சி இப்படி அழக்கூடாது. என் கண்ணல்லவா, எழுந் திரடா கண்ணு' என்று அன்பைப் பூசினுள் கனகம். வெடித்த நிலத்தில் மழைத் துளி பாய்ந்ததைப் போல, அலமுவின் உள்ளத்தில் சற்றுக் கசிவு கண்டது. கண்ணத் துடைத்துக் கொண்டு எழுந்தாள். - உம்.பொருமுவதால் என்ன லாபம்? வாய்த்ததைக் கொண்டு திருப்தி அடைய வேண்டியதுதான். 28يb g{{ வருடம் பழகிப்போன விஷயம்தானே !

  • வாய்க்காலுக்குப் போய்க் குளித்து விட்டு வரட்டுமா?’ என்ருள் அலமு. - -

' உடம்புக்கு ஆகுமோ?’ என்று கேட்ட கனகம், பிறகு தன் பெண்ணின் ஆவலுக்கு எதிர்சொல்ல வேண்டா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிறுகதைக்_கோவை.pdf/44&oldid=830397" இலிருந்து மீள்விக்கப்பட்டது