பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4星 கொண்டிருந்தான். அவளைப் பார்த்ததும், ' இது வரை யிலே ஐம்பது ரூபாய் ஆயிடுத்து......இத்தனைக்கும் வழி யிலே ஒரு தூசு கூட வாங்கல்லே ' என்ருன். " போகுப் போறது. காப்பி சாப்பிடுங்கோ’ மடக் கென்று காப்பியை முழுங்கினன். ' ஒரு வாரம் தான் லிவ். தெரிஞ்சுதா ?...இதுக்கே பெரிய துரைகிட்ட சண்டைபோட்டு வாங்கிண்டு வந்திருக்கேன் ’’ ' குளிக்கிறீர்களா? வெந்நீர் இருக்கு......”*

    • . . . ... thـه **

கை நிறைய வளையல்கள் குலுங்க அவள் திரும்பினள். ஒரு வார்த்தை - ஒரே ஒரு வார்த்தை - அன்புடன் விசாரிக்கத் தெரிய வில்லையே! ஐம்பது ரூபாய் செலவான லென்ன, ஐந்நூறு ஆளுலென்ன ! ஆற்றிலே கொண்டு எறியலாமே அந்தப் பணத்தை! அவளுக்கு ஒரு முழப் பூ வாங்கி வரக்கூடாதா? செலவாயிற்ரும் செலவு! பகலில் தலையை வலிப்பது போலிருந்தது அலமுவுக்கு. மெள்ள மெள்ள வலி அதிகரித்து, உடலில் குளிர் கண்டு விட்டது. மாலையில் பேச்சு மூச்சற்றுப் படுத்துவிட்டாள். தேசிகாச்சாரி பயந்து போய் டாக்டரை அழைத்து வர ஓடினர். கனகம் கையைப் பிசைந்தாள். இதற்கு முன் மூன்று தடவை இந்த அநுபவம் உண்டு. ஆளுல் சீமந்த மாதம் வரை தாண்டியதில்லை. மூன்றிலும், நான்கிலுமாகக் கரைந்து போனவை. இப்போதும் அப்படித்தான ? பெண் வந்த அன்றைக்கு ஆரம்பித்த அபசகுனத்தின் விளைவோ இதெல்லாம் ? நல்லபடியாக முடியாதா? . ' என்னடியம்மா, என்ன பண்றது?’ என்று அடிக் கொரு முறை கேட்டுக் கொண்டே இருந்தாள். பதில் இல்லை. நினைவற்றுக் கிடந்தாள். - டாக்டர் வந்து பார்த்து, இஞ்செக்ஷன் போட்டுவிட்டு, இரண்டு மருந்துகளே எழுதிக் கொடுத்தார். இவ்வளவையும் பொம்மை போலப் பார்த்துக் கொண்டே நின்றன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிறுகதைக்_கோவை.pdf/47&oldid=830402" இலிருந்து மீள்விக்கப்பட்டது