பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42


பத்மளுபன். என்ன செய்வதென்று தெரியவில்லையோ அல்லது இத்தகைய ஏமாற்றத்தை அவன் எதிர் பார்க்க வில்லையோ, அவன் முகம் பேயறைந்தது போலாகிவிட்டது. வாசல் அறைக்குப் போய் விட்டான். யாரும் சாப்பிடவில்லை. சாப்பிடத் தோன்றவில்லை. இன்னும் இரண்டு நாள் தான் இருக்கிறது. சீமந்தத்துக்கு பத்திரிகை அடித்து அனுப்பியாகி விட்டது. வருபவர் களுக்கு என்ன பதில் சொல்லப் போகிருேமோ என்கிற பீதி கனகத்துக்கு.

  • நீங்கள் ஒரு வாய் சாப்பிடுங்களேன், மாப்பிள்ளை’ என்ருர் தேசிகாச்சரி.

" உம்......' என்ருன் பத்மனபன். பிறகு “ வேண்டாம் 4 - е е е பசியில்லை எனக்கு ' என்று கூறிவிட்டான். பத்து மணி இருக்கும், அலமு மெல்லக் கண் திறந்தாள். கனகம் அருகில் நின்று கொண்டிருந்ததைக் கண்டதும், “ அம்மா!' என்று அரற்றினுள். " அழாதேம்மா... எல்லாம் சரியாயிடும். இரு, மருந்து தரேன் ” என்று ஓடினுள் கனகம். பத்மளுடன் வந்து பார்த்தான். அவன் முகம் வெளிறி யிருந்தது. அவள் பேசவில்லை, தலையைத் திருப்பிக் கொண்டாள். பயங்கர அமைதி ! டாக்டர் பதினுேரு மணிக்கு ஒரு முறை வந்து விட்டுப் போனர். தேசிகாச்சாரி வாசல் திண்ணையில் படுத்தார். கனகம் கூடத்தில் சுருண்டு கிடந்தாள். மணி என்ன இருக்குமோ! அலமுவுக்கு சுயநினைவும் விழிப்பும் வந்தன. இருளைக் கிளறிக் கொண்டு சிம்னியின் சிறு நாக்கு நீண்டு துவண்டது. வறண்ட புன்சிரிப்பு இதழ்க் கடையில் மெல்ல ஒட, அவள் எழுந்திருக்க முயன்ருள். அம்மாடி! எவ்வளவு நிம்மதி! இத்துடன் முழு நிம்மதியும் வந்துவிடக் கூடாதா? வந்து விடும்! நிச்சயம் வந்து விடும்! -