பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43


புழக் கடைக் கதவை மெல்லத் திறந்தாள். நடை தள்ளாடியது. அம்மாவைத் துணைக்கு அழைத்துக் கொண்டு வந்திருக்கலாம். பாவம் ! அவள் இப்போது தான் சற்று அயர்ந்து கண் மூடியிருப்பாள். அவளே எழுப்புவானேன்? ஆனல் புழக்கடைக் கதவு தாளிடப் படவில்லையே! மறந்து விட்டார்களோ சாத்தி வைக்க ? ஒற்றைப் பாக்கு மரமும், மல்லிகைப் புதரும், அவரைக் கொடி வீடும் கண்ணில் பட்டன. மெல்லிய சந்திரனின் ஒளிக் கதிர்கள், வலிக்கு ஒத்தடம் கொடுப்பன போலப் பரவியிருந்தன. - 系彩 அலமுவா છૂss மாட்டுக் கொட்டத்திலிருந்து குரல் வந்தது. அலமு திடுக்கிட்டாள், யார் ? அவரா? இங்கே என்ன செய்கிருர் ? தள்ளாடியபடி, "ஆமாம், நீங்கள்...?’ என்று திணறிஞள். அவன் எழுந்து வந்தான். அலமு அவனேயே பார்த் தாள். கண்கள் சிவந்திருந்தன. தனிமையில் கண்ணிர் வடித்திருக்கிருன் என்பதை அவை புலப்படுத்தின. க்லேந்து கிடந்த தலே மயிர் முகத்தில் புரள, அவ்ன் நின்ற நிலையைக் கண்டு அவள் நெஞ்சு விண்டது. " நான் பயந்தே போயிட்டேன், அலமு......எனக்கு இப்போ போதாத காலம். ஆபிஸிலே துரை போன வாரம் எரிஞ்சு விழுந்தான்.இங்கே இப்படி இருக்கிறது ' என்ருன் அவன் குழந்தை போல. அவளுக்கு அழுகை வந்து விடும் போல ஆகிவிட்டது. ' எனக்கு ஒன்றும் இல்லை...பயப்படாதீர்கள் ” என்ருள்.

  • பயப்படறதென்ன ? நீ இல்லை என்ருல் என் வாழ்வு முடிந்தது. அவ்வளவுதான்.” .

" அப்படி எல்லாம் சொல்லாதீர்கள். உங்களைப் பார்த் தால் எனக்குப் பயமாக இருக்கிறது.ஒரு மாசத்துக்கு லீவு எழுதுங்கள்.”

  • எழுதியாச்சே!”