பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5直 அர்ச்சகர் முன்னல் வந்து நின்றர். " அதென்னது அது கையிலெ ?” ' கவர் 3 * " என்ன கவரு?’’ " ஒண்னுமில்லை. சாதாக் கவர்தான். தபால்லெ சேர்க்கப்போறேன்.” கொண்டாரும் பாப்பம்." வாங்கிப் பார்த்தான். உறையோடு ஒரு கார்டுமிருந்தது. கார்டு, யாரோ யாருக்கோ எழுதியது. நீள உறை ஸ்தல டி. எஸ். பி. காரியாலயத்தின் தலைமை அலுவலகத்திற்குப் போக வேண்டியது. எழுபத்தி மூன்று நாற்பத்தியேழு அர்ச்சகர் முகத்தை வெறிக்கப் பார்த்தான். அர்ச்சகர் முகம் சிவந்தது. இமைக்காமல் பார்த்துக்கொண்டே இருந்தான். அர்ச்சகர் முகம் மேலும் சிவந்தது. எழுபத்தி மூன்று நாற்பத்தியேழுக்கு ஒரே சந்தேகம் ; ஒரே சந்தோஷம். அவனுடைய மகள் அதிருஷ்டசாலிதான் ! * இந்தக் கவர் உம்ம கையிலெ எப்படி சிக்கிச்சு?’’ குரலில், அதிகார மிடுக்கேறிவிட்டது. அர்ச்சகர் உதட்டைப் பூட்டிக் கொண்டு நின்றர். முகம் தொங்கிப் ப்ோய்விட்டது.

  • வாயிலெ கொளுக்கட்டையோ?” அதற்கும் பதிலில்லே.
  • மயிலே மயிலே எறகு போடுன்னு போடாது. நடவும் ஸ்டேஷனுக்கு.” -
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிறுகதைக்_கோவை.pdf/57&oldid=830426" இலிருந்து மீள்விக்கப்பட்டது