பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 ஸ்டேஷனுக்கு ' என்ற வார்த்தை காதில் விழுந்ததும், உடம்பை ஒரு உலுக்கு உலுக்கியது அர்ச்சகருக்கு, அர்ச்சகர் முதுகைப் பிடித்து இலேசாகத் தள்ளினுன் எழுபத்தி மூன்று நாற்பத்தியேழு. அர்ச்சகர் தட்டுத் தடுமாறிப் பேச ஆரம்பித்தார். " நான் சொல்றதெ கொஞ்சம் பெரிய மனஸு பண்ணி, தயவாக் கேக்கணும். எனக்குப் போராத காலம், இல்லேன் கு........” ' இளுக்காமெ விஷயத்துக்கு வாரும். 雯剑 ' எனக்குப்போராத காலம். இல்லேன்னு இந்த ஸ்ந்தி வேளையிலே, நட்ட நடுக்க, ஏதோ திருடன்மாதிரி, ஏதோ கொள்ளேக் காரன் மாதிரி, ரவுடி மாதிரி, ஜேப்படிக் காரன் மாதிரி.....” " அட சட்! விஷயத்தைக் கக்கித் தொலையுமே. இளு. இளுன்னு இளுக்கான் மனிசன்.” “ இதோ இந்த கார்டெ சேக்கப்போனேன். கோவிலுக் குப் பக்கத்திலெ தபால் பெட்டி தொங்கறது. தொங்கற தபால் பெட்டியிலெ இந்தக் கார்டெ சேக்கப் போனேன். ” * போற வளியிலெ இந்த கவர் ரோட்டிலே படுத்துக் கிட்டு, அர்ச்சகரே வாரும், வாரும்னு கூவி அளச்சு தாக்கும்!” - " நான் சொல்றதெ கொஞ்சம் பெரிய மனஸ் பண்ணி தயவாக் கேக்கனும். தொங்கற தபால் பெட்டியிலெ இந்தக் கார்டெ போடப் போனேன். போட முடியலெ. ’’ கை சுளிக்கிடிச்சோவ் ?” - * இல்லெ. இந்த நீளக் கவர் தொங்கற தபால் பெட்டி யிலெ வாயெ மறிச்சுண்டிருந்தது.” " ஆமய்யா! அப்படிக் கொண்டாரும், கதெயெ.” * கதெ இல்லை. நெஜத்தெ. அப்படியே சொல்றேன். தொங்கற தபால் பெட்டியிலெ இந்த நீளக் கவர் வாயெ. மறிச்சுண்டு வளஞ்சு கெடந்தது.” . . . . . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிறுகதைக்_கோவை.pdf/58&oldid=830428" இலிருந்து மீள்விக்கப்பட்டது