பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53


'அட.டன். டா !”

  • இந்தக் கார்டெ ஆனமட்டும் உள்ளெ தள்ளிப் பாத்தேன். தள்ளித் தள்ளிப் பாத்தேன். உள்ளே போக மாட்டேன்னு சொல்லிடுத்து.'

' சொல்லும் சொல்லும்.’’ " தொங்கற தபால் பெட்டி வாய் நுனியிலே அப்படியே ரெண்டு விரலெ மட்டும் உள்ளேவிட்டு நீளக்கவரெ வெளி யிலே எடுத்தேன். ’’ " அபார மூளெ !” ' சொல்றதெ கொஞ்சம் கேளுங்கொளேன். நான் ஒரு தப்பும் பண்ணலெ. தப்புத் தண் டாவுக்குப் போறவனில்லெ நான். ஊருக்குள்ளெ வந்து விசாரிச்சாத் தெரியும். நாலு தலெமொறயா நதிக் கிஷ்ணன் கோவில் பூசை எங்களுக்கு. இன்னித் தேதி வரையிலும்...... ' " அட விஷயத்தை சுருக்கச் சொல்லித் தொலையுமே அய்யா. செக்கு மாடு கணக்கா சுத்திச் சுத்தி வாருன் மனுசன். '

  • தொங்கற தபால் பெட்டி வாயிலெ ரெண்டு விரலெ மட்டும் விட்டு கவரை வெளியிலெ எடுத்து, கார் டையும் கவரையும் சேத்துப்போடப் பாத்தேன். முடியலெ. ’’

'முடியாது, முடியாது.” " தள்ளித் தள்ளிப் பார்த்தேன். கவர் மடிஞ்சு மீடிஞ்சு வாயெ அடச்சுது. என்ன சேறதுனு தெரியலெ. திரு திருனு விழிக்கறேன். மேலேயும், கீழையும் பாக்கறேன். முன்னும் பின்னும் போகலெ எனக்கு. என்னடா சேற துன்னு யோசிச்சேன். சரி, அந்த நதிக் கிஷ்னன் விட்டது வழினு மனசெ தேத்திண்டு, பெரிய தபாலாபீஸிலெ கொண்டு வந்து சேத்துப் புடறதுனு தீர்மானம் பண்ணிண்டு வறேன்.” "அவ்வளவும் கப்ஸ் அண்டப் புளுகு!" என்ருன் எழுபத்தி மூன்று நாற்பத்தியேழு.