பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vi வருவது மிகவும் பாராட்டுக்குரியது. இந்நிறுவனம் குழந் தைகள் முதற்கொண்டு பெரியவர்கள் வரை எல்லோருக்கும் பயன்படும் வகையிலே பல புத்தகங்களை வெளியிட்டிருக் கின்றது. குறிப்பாகத் திருக்குறள் போன்ற நூலை, கன்ன டத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டிருப்பது மிகவும் போற்றுதற்குரியது. கருத்துப் பரிமாற்றத்தில்தான் மனித இனத்தின் அறிவு வளர்ச்சியும் உலக அமைதியும் அடங்கியிருக்கின்றன. இவ்வுண்மையை அடிப்படையாகக் கொண்டு தென் பகுதியிலே உள்ள சிறந்த நூல்களைக் குறைந்த விலையிலே மற்ற மொழியாளரும் அறிந்துகொள்ளும் வகையிலே ஆக்கப் பணிபுரியும் டிரஸ்டின் சேவை மேலும் மேலும் வளர்ந்து பயன்படும் என நினைக்கிறேன். புத்தகங்கள் வெளியிடு வதோடு மட்டுமல்லாது கருத்து அரங்கிற்கு ஏற்பாடு செய் வதிலும், ஆராய்ச்சி வேலைகளிலும் இப்புத்தக டிரஸ்ட் ஈடு பட்டிருப்பது மிகவும் மகிழ்ச்சிக்குரியது. குறிப்பாக, குழந்: தைகளின் புத்தகம் படிக்கும் பழக்கத்தைப் பற்றி அவர்கள் ஆராய்ச்சி நடத்தியிருப்பது நாட்டிற்கு மிகவும் நன்மை பயக்கும் என்று எண்ணுகிறேன். புதிதாக அவர்கள் தமிழில் வெளியிட இருக்கும் நூல்கள் தமிழ்ப் பெருமக்களிடையே பெரும் ஆதரவோடு திகழும் என்று எண்ணுகிறேன். இத்துறையில் அவர்கள் மேலும் மேலும் பல சிறந்த நூல்களை எளிய விலையில் வெளியிட்டுத் தென் பகுதி மக்க ளுக்கும், நாடு முழுமைக்கும் பயன்படும் வகையில் முன்னேற இறைவன் அருள்வாளுக. υιη φumνίκη

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிறுகதைக்_கோவை.pdf/6&oldid=830432" இலிருந்து மீள்விக்கப்பட்டது