பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55


அர்ச்சகருக்கு, தான் ஜெயில் கம்பிகளைப் பிடித்துக் கொண்டு நிற்பது மாதிரித் தோன்றிற்று. மனைவியும் குழந்தைகளும், முன்னல் நின்று நெஞ்சிலடித்துக்கொண்டு அழுகிருர்கள். போலீஸ் சேவகன் வந்து தடியால் அவர் களே வெளியே தள்ளுகிருன். எழுபத்தி மூன்று நாற்பத்தியேழின் காலில் சாஷ்டாங்க மாக விழுந்துவிடுவோமா என்று எண்ணினர் அர்ச்சகர். குய்யோ முறையோ என்று கத்தி, கூட்டத்தைக் கூட்டு வோமா என்றும் எண்ணிஞர். நூறுபேர் கூடத்தானே செய்வார்கள். நூறுபேர் கூடினுல் தெரிந்தவர்கள் பத்து பேர் இருக்கத் தானே செய்வார்கள். இது என்ன அநியாயம் என்று முன் வந்து சொல்லமாட்டார்களா ? ஆளுல் வாயைத் திறந்தாலே முதுகில் அறை விழுமோ என்று பயந்தார். மேலும் அவருக்குத் தொண்டையை அடைத்தது. நிமிஷத்திற்கு நிமிஷம் வயிற்றிலிருந்து கனமாக ஏதோ ஒன்று மேலெழும்பி நெஞ்சைக் கடைந்தது. துக்கத்தை விழுங்கி விழுங்கிப் பார்த்தார். ரோட்டிலேயே அழுது விடுவோமோவென்று பயந்தார். மெயின் ரஸ்தா இன்னும் வரவில்லை. இரு மருங்கிலும் ஓங்கி வளர்ந்திருந்த வேப்ப மரங்கள் இருளைப் பெய்து கொண்டிருந்தன. அர்ச்சகர் துண்டால் முகத்தைத் துடைத்துக் கொண்டார். எழுபத்தி மூன்று நாற்பத்தியேழுக்கும் இப்பொழுது அவன் குழந்தையின் அதிர்ஷ்டத்தைப்பற்றி சந்தேகம் தட்டிவிட்டது. வெடிக்காமல், புஸ்ஸென்று ஒடுங்கிப் போன யானே வெடியைப் பார்த்து உதட்டைப் பிதுக்கும் சிறுவன் மனநிலையிலிருந்தான் அவன். இதுவும் இப் படியா !” என்று முனு முணுத்தான். அர்ச்சகரை நினைக்கும் போது அவனுக்கு ஒரு பக்கம் சிரிப்பு வந்தது. மறு பக்கம் அனுதாபப் பட்டான். இருந்தாலும் கடைசிவரை ஒரு கை பார்த்துவிடுவது என்று எண்ணிக் கொண்டான். வேறு வழியில்லை. -