பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63 எழுபத்திமூன்று நாற்பத்தியேழுக்கு அந்த இடத்தி லேயே அர்ச்சகரை கண்டதுண்டமாக வெட்டிப் போட்டு விடலாம் போலிருந்தது. " மகா பிசுநாறி ஆசாமியா இருக்கெரே !’ என்ருன் ஆத்திரத்துடன். " என்ன சேறது? அப்படித்தான் என்ன வச்சிருக்கான் அவன்.” 'அவன் யாரு அவன் ?’’ " மேலே இருக்கான் பாரும், அவன்.” இருவரும் ஸ்டேஷன் முன்னுல் வந்து விட்டார்கள். ஸ்டேஷனுக்கு முன்னுலிருந்த வெற்றிலே பாக்குக் கடையில், கடைக்காரரிடம் பேசிக்கொண்டிருந்தவரை, அண்ணுச்சீ என்று கூப்பிட்டுக் கொண்டே, அவரிடம் வலிய பேச ஆரம்பித்தான் எழுபத்திமூன்று நாற்பத்தியேழு. அர்ச்சகர் பின்னல் நின்றுகொண்டிருந்தார். அண்ணுச்சி யிடம் சளசளவென்று பேச்சை வளர்த்திக் கொண்டிருந் தான் அவன். அர்ச்சகர் நின்று கொண்டிருந்த இடத்தை அவன் அசைப்பிலும் திரும்பிப் பார்க்கவில்லை. அவர் போவதானல் போகட்டும் என்ற தோரணையில் நிற்பது போலிருந்தது. அர்ச்சகர் இதைப் புரிந்துகொண்டார். ஆளுல் அவர் கற்சிலே மாதிரி அங்கேயே நின்றர். அண்ணுச்சிக்குப் பேச்சு சலித்து விட்டது. எழுபத்திமூன்று நாற்பத்தியேழு அர்ச்சகர் பக்கம் திரும்பி, 'சாமி, நீங்க போறதுன்னப் போங்க, பின்னலெ பாத்துக்கிடலாம்” என்றன். "கையோடெ காரியத்தை முடிச்சுடலாமே ' என்ருர் அர்ச்சகர், "அட போங்க சாமீ. நான்தான் சொல்லுதேனெ பின்னுலெ பாத்துக்கிடலாம்னு. உ.டாமெ பிடிக்கேரே.' ' என்னப்பா விஷயம்?” என்று கேட்டார் அண்ணுச்சி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிறுகதைக்_கோவை.pdf/68&oldid=830449" இலிருந்து மீள்விக்கப்பட்டது