பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63


  • ஒண்ணுமில்லெ. என் கொளந்தெக்குப் பொறந்த நாளு நாளைக்கு. பூசைகீசை பண்ணி கொண்டாடனும்னு சொல்லுது அது. அதுதான் இவரிட்டே கேட்டுக்கிட்டே வாறேன். சாமான் கீமான் வாங்கணும்ங்காரு. ஆன பணத் துக்கு எங்கே போகுது ?’’

அடி சக்கே ’ என்று மனதில் சொல்லிக்கொண்டார் அர்ச்சகர். பணம் சம்பந்தமான பேச்சு வந்ததாலோ என்னமோ அண்ணுச்சி சட்டென்று விடைபெற்றுக்கொண்டு சென்று விட்டார். எழுபத்திமூன்று நாற்பத்தியேழும் அர்ச்சகர் நின்ற திசைக்கு நேர் எதிர்த்திசை நோக்கி மடமடவென்று நடக்க ஆரம்பித்தான். அர்ச்சகர் பின்னல் ஓடி ஒடிச் சென்ருர்.

  • இந்தாரும். ஒய், கொஞ்சம் நில்லும். என்ன இது ? நடுரோட்டிலெ நிக்கவச்சுட்டு நீர் பாட்டுக்கு கம்பியெ நீட்டறேரே ?’’

" அட சரிதான் போமய்யா?” " என்னய்யா இது, எனக்கு ஒண்ணும் புரியலேயே."

  • வீட்டெப் பாத்துப் போமய்யா. போட்டு பிராணனெ வாங்குதிரெ.”

“என்னன்னமோ சொன்னேர். ஆஊ ஆன அறுபத்தி ரெண்டுன்னு சொன்னீர். இப்பொ போ போனு விரட் டறேரே. ’ . எழுபத்தி மூன்று நாற்பத்தி யேழுக்கு அசாத்திய கோபம் வந்துவிட்டது. கண்கள் சிவந்தன. நெற்றிப் பொட்டில் நரம்புகள் புடைத்தன. அர்ச்சகர் முகத்தையே இமைக்காமல் வெறிக்கப் பார்த்தான். அர்ச்சகரும் இமைக் காமல் பார்த்தார். அவருக்கு சற்றுப் பயமாகத்தான் இருந்தது. ஆனல் அதே சமயத்தில் அடக்க முடியாத சிரிப்பும் வந்தது. இலேசான புன்னகை உதட்டில்