பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ம க ன் வ ங் த ா ன் டி. எஸ். கோதண்டராமன் தெருவில் மாட்டு வண்டியின் ஜல், ஜல் என்ற ஒலி கேட்டதும் கனகம் அம்மாள் பரபரப்புடன் வெளியே வந்தாள். அவள் வீட்டைத் தாண்டிக்கொண்டு கீழ்த் திசை நோக்கிச் சென்றது வண்டி. மாட்டு வண்டி போவ தையே சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்த கனகம் மெல்லிய நகைப்பைச் சிதற விட்ட வண்ணம் உள்ளே செல்லத் திரும்பினுள். கிழக்குப் பக்கத்திலுள்ள யார் வீட்டுக்கோ யாரோ போய்க் கொண்டிருக்கிருர்கள். அவளுடைய அருமை மகன் துரை அந்த வண்டியில் வர வில்லை. இதில் ஏமாற்றத்துக்கு என்ன இருக்கிறது ? அன்றைய தினம் கிராமத்துக்கு வருவதாக துரை கடிதம் ஏதும் எழுதவில்லை. கடந்த இருபது வருடங்களாக ஒவ் வொரு நாளும், ஒவ்வொரு விநாடியும் துரையின் வருகையை எதிர் பார்த்துக் கொண்டிருப்பதைப் போலவே அன்றைக்கும் அவனே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிருள், கனகம். துரை இன்றைக்கும் வரவில்லை. 27–2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிறுகதைக்_கோவை.pdf/7&oldid=830453" இலிருந்து மீள்விக்கப்பட்டது