பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64


நெளிந்தது. அர்ச்சகர் சிரிப்பை அடக்குவதையும், அவர் உதட்டில் சிரிப்பு பீறிட்டு வழிவதையும் கவனித்தான் எழு பத்தி மூன்று நாற்பத்தேழு சிரிப்புப் பொத்துக்கொண்டு வந்துவிட்டது அவனுக்கு. எழுபத்திமூன்று நாற்பத்தியேழு கடகட வென்று சிரித்தான். சப்தம் போட்டுச் சிரித்தான். வாய்விட்டுச் சிரித்தான். குழந்தை போல் சிரித்தான். அச்சகரும் சேர்ந்து கொண்டு அட்டகாசமாகச் சிரித்தார். எழுபத்திமூன்று நாற்பத்தியேழு அர்ச்சகரிடம் மிக நெருங்கி நின்று கொண்டு, அவர் முகத்தைப் பார்த்து சிரித்தபடி சொன்னுன் : . " வீட்டுக்குப் போம். நானும் வீட்டுக்குத்தான் போறேன்' குரல் மிக அமைதியாக இருந்தது. அர்ச்சகர் அவன் முகத்தைப் பார்த்தார். சற்று முன்னல், அவர் முன் நின்ற ஆள் மாதிரியே இல்லே. அர்ச்சகருக்கு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை. " நானும் அந்தப் பக்கம்தானே போகணும். சேர்ந்தே போறது” என்று கூட நடந்தார் அர்ச்சகர். "ஆமாம், அந்த ஆசாமீட்டெ ஏதோ ஜென்ம நக்ஷத் திரம்னு சொன்னேரே, வாஸ்தவம்தான ? இல்லெ எங்கிட்டெக் காட்டின டிராமாவுக்கு மிச்சமோ ?” என்று கேட்டார் அர்ச்சகர். உண்மைதான் வேய், நாளைக்குப் பொறந்த நாள் : என்ன கொழந்தெ?’ - "பொம்புளெப் புள்ளெ." தலச்சனெ?” "ஆமா. கலியாணம் முடிஞ்சு பதினுெண்ணு வருச மாவுது. • . -- - - ; : "ஓஹோ, பேரென்ன?”