பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67


நாலேந்து பழங்களைப் பிய்த்தான். இந்தாரும்; சாப்பிடும் ” என்று அர்ச்சகரை நோக்கி நீட்டினன். அர்ச்சகர் இரண்டு கைகளையும் நீட்டி வாங்கிக் கொண்டார். இரண்டுபேரும் வெற்றிலே போட்டுக் கொண்டார்கள். - - " கணக்கிலெ எளுதிக்கிடுங்க” என்ருன் எழுபத்தி மூன்று நாற்பத்தியேழு, கடைக்காரரை நோக்கி. “ எளுதிக்கிட்டே இருக்கேன்’ என்ருர் கடைக்காரர். " சும்மா எளுதுங்க. ரெண்டுநாள் களியட்டும். செக்கு கிளிச்சுத் தாறேன். ' நடந்து, இரண்டு பேர்களும் பரஸ்பரம் பிரியவேண்டிய இடத்திற்கு வந்துவிட்டார்கள். 'சாமி, அப்பொ எனக்கு விடெ கொடுங்க. ஒண்ணும் மனசிலெ வச்சுக்கிடாதீங்க” என்ருன் எழுபத்தி மூன்று நாற்பத்தியேழு. " என்ன நெனக்கிறது. காக்கி ஜாதியே இப்படித் தான்’ என்ருர் அர்ச்சகர். " எல்லாம் ஒரே ஜாதிதான் ” என்ருன் எழுபத்தி மூன்று நாற்பத்தியேழு.

  • அதுசரி, நாளேக்கு என்ன செய்யப் போறே?” "என்ன செய்யுதுனு விளங்கலெ. அதுக்கு முகத்திலெ போய் முளிக்கவே வெட்கமாயிருக்கு. ஆயிரம் நெனப்பு நெனச்சுக்கிட்டு இருக்கும். சரி, நான் வாறேன் ' என்று சொல்லிவிட்டு நடந்தான் எழுபத்திமூன்று நாற்பத்தியேழு.

ஒய், இங்கே வாரும்” என்ருர் அர்ச்சகர். - - வந்தான். - - அர்ச்சகர் அரை வேஷ்டியை இலேசாக அவிழ்த்து விட்டுக்கொண்டார். இப்பொழுது வயிற்றில் ஒரு துணி பெல்ட் தெரிந்தது. துணி பெல்ட்டில் ஒவ்வொரு இடமாகத்