பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வட்டிற்சோறு பூவை எஸ். ஆறுமுகம்

  • பச்சை மண் சிரிக்கக் கண்டால், உள்ளம் கொள்ளே போய்விடுமல்லவா ? அப்படித்தான் சுருளாண்டியும் மனம் பறிபோய் நின்றன். ஆனல், அவனே அவ்வாறு ஆக்கியது குழவியா? அல்ல. ! சம்பான் தளை எழுபத்தெட்டுக் குழி நிலத்தில் நடப்பட்டிருந்த நாற்றுக்கள் பசுமை ஏந்திச் சிரிப் பினைச் சிந்திக்கொண்டிருந்தன. அவன் சிந்தை இழந்து நின்றதில் வியப்பு ஏது ? வினயந்தான் உண்டா ?

சுருளாண்டியின் அடிப்பாதங்களில் வளை நண்டு நெளிந்து தப்பிய பொறியுணர்வு ஊடுருவியது ; வாய்க்கால் நீர் உடலை நடுங்கச் செய்தது ; ஊதல் காற்று வேறு. நிலத்தின் உள் வாயிலிருந்து வெளியேறி நடந்து, வரப்புக் கரையில் வந்து நின்ருன். பிடுங்கி எறியப்பட்டிருந்த கேளே’கள் சில அவனது கால் விரல்களிலே சிக்கிக் கொண்டன; விடுபட்டு நடையைத் தொடர்ந்தான். தோளில் ஏர்க்கலப்பை இருந்தது; புதுக்கோட்டைக் காளைகள் இரண்டும் கைப்பிடிப்பில் அணந்தன. அவன் பெருமூச்செறிந்தான். புதிதாக வசப்படுத்தி யிருந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிறுகதைக்_கோவை.pdf/75&oldid=830466" இலிருந்து மீள்விக்கப்பட்டது