பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3


கொண்டு வேறு யார் வரப் போகிருர்கள்? உற்றமா, சுற்றமா ?......துரைதான் வருவான் !...” ஐம்பது வயதை நெருங்கிக் கொண்டிருந்த வற்றிப் போன உடலில், உட்குழிந்த கண்களில் நம்பிக்கை ஒளி வீசிற்று. துரையின் வருகைக்காகக் கல்பகோடி காலமாகுலும் பெரும் நம்பிக்கையோடு காத்திருக்கத் துணிந்த மனம் பெரு மிதத்தால் விம்மியது. - கண்டிப்பாக இன்று வரத்தான் போகிருன், அவன். அம்மா காத்துக் கொண்டிருக்கிருள் என்பது அவனுக்குத் தெரியாதா?... துரை, உனக்காகக் கீரைக்கூட்டு பண்ணிவச்சிருக் கேண்டா ! உனக்கு ரொம்பப் பிடிக்குமேன்னுதான் பண்ணி னேன். அன்னிக்கு, அப்பாவுக்குக்கூடப் போடாமல் எல்லாத்தையும் எனக்கே போட்டு விடுன்னு சொன்னியே ? அப்புறம், நீ கீரைக்கூட்டு சாப்பிட்டியோ, இல்லையோ ? உன் வாய்க்கு வகையா யார் பண்ணிப் போட்டிருக்கப் போரு ? அதனுல்தான் நான் தயாரா வெச்சிருக்கேன் !. ஆமாம், அன்னிக்குக் கூட்டு நன்ருக இருந்த தோன்னே ? சாப்பிட்டுக் கொண்டிருக்கிறபோது, கீரையைக்கூடச் சாப் பிடாமல் பாதியிலே எழுந்து, அன்னிக்கு... ' 杀 滚 亲 அன்றைக்கு சனிக்கிழமை . பள்ளிக்கூடம் இல்லை. காலையில் எட்டரை மணிக்குப் பழையது சாப்பிட்டு விட்டு வெளியே புறப்பட்டான், துரை. அவனுடைய தந்தை அருளுசலம் ஏழு மணிக்கெல்லாம் வண்டியைக் கட்டிக் கொண்டு கழனியைப் பார்க்கச் சென்றுவிட்டார். துரை வீடு திரும்புகையில் மணி பதினென்று. பரட்டைத் தலையும் வியர்வை வழியும் முகமுமாய் வீட்டுக்குள் நுழைந்தான். மைல் கணக்காக ஓடி வந்த வஆனப்போல் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கிற்று. அவனைக் கண்டதும் கனகம் பயந்தே போளுள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிறுகதைக்_கோவை.pdf/9&oldid=1276055" இலிருந்து மீள்விக்கப்பட்டது