பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84


பூங்காவனம் கையில் தகரக் குவளையில் சூடான தேத் தண்ணிருடனும், இரண்டு பன்னுடனும் வந்தான். மல்லியின் படபடப்பு அவனுக்குத் தெரியாது. மல்லி, மல்லி, இங்கேயே தூங்கு. நானு சினிமா பாத்துட்டு வந்து, டறேன். ஜோரான ஆட்டமாம் என்று பூங்காவனம் கூறி விட்டுக் கிளம்பத் தயாரானன். மல்லி ஏதும் பேசவில்லை. அவள் ஏதோ கூற வாயெடுத்தாள். பூங்காவனம் அங்கு நிற்கவில்லை. வானம் இருண்டிருந்தது. வீர் வீர் என்று காற்று வீசியது. எங்கிருந்தோ மேகங்களை அழைத்துக் கொண்டு வந்து மோதச் செய்தது. கம்பி மின்னல் இருண்ட வானத்தைப் பிளந்தது. சப்த சமுத்திரங்களும் பொத்துக் கொண்டது போன்று மழை கொட்டியது. மல்லியம்மாள் தட்டுத் தடுமாறிப் போய் காலியாக நின்று கொண்டிருந்த கம்பார்ட்மெண்டின் பெஞ்சியில் நிம்மதியாகப் படுத்துக் கொண்டாள். அவள் மனத்தில் பலவித எண்ணங்கள் வட்டமிட்டன. முத்தையன் சொல்வதுபோல் பூங்காவனம் பஸ் ஸ்டாண்டுக்கு அவளைத் தேடிப் போயிருப்பானே...... ஆசை காட்டி மோசஞ் செய்தேனே அன்புடையவர்க்குத் துன்பம் செய்தேனே...?? மல்லி மனத்திற்குள்ளே இந்தப் பாட்டைச் சொல்லிப். பார்த்துக்கொண்டாள். வெளியே மழை ஒயவில்லை. ஜங்ஷனுக்கு வரும் வண்டிகள் வேறு ஏதுமில்லை. இதோடு காலே நான்கு மணிக்குத்தான் வண்டி. மழை இரைச்சலைத். தவிர வேறு ஒலி ஏதுமில்லே. பயங்கரமான எண்ணங்கள் அவளைச் சுற்றி வட்டமிட்டன. அவற்றிலிருந்து விடுபட மல்லி கண்ணே மூடினுள். வெகுநேரம் கழித்துத் தூக்கம் வந்தது. கம்பார்ட்மெண்டின் கதவு திறக்கப்படுவது போன்ற ஓசை யாரோ ஏறும் ஓசை. - திடீரென மல்லி கண்விழித்துக்கொண்டாள். கம்பார்ட் மெண்ட் கதவு திறக்கப்படும் ஒசை. யாரோ ஏறும் ஓசை