பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88


பகிரங்கமாகப் பேசிக் கொண்டனர். மல்லியையும், பூங்கா வனத்தையும் சம்பந்தப்படுத்திப் பேசினர். உலகம் பேசு வதை அவள் காதால் கேட்டாள். சில சமயம் நெஞ்சு வெடித்து விடுவதுபோன்ற உணர்ச்சி ஏற்படும். தனியே உட்கார்ந்து கொண்டு கண்ணிர் விட்டுக் கலங்குவாள். முத்தையன் எங்கிருந்தாவது ஓடிவந்து அவள் தனியே இருப்பதறிந்து அவளைத் தேற்ற முயல்வான். ஆனல் அவ ளுடைய சுடு சொற்கள் அஸ்திரமாக மாறித் துரத்தி அடித்து விடும். நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனே நட்டாற்றில் கை நழுவ விட்டேனே ஆசைகாட்டி மோசஞ் செய்தேனே அன்புடையவர்க்குத் துன்பம் செய்தேனே... இந்தப் பாட்டில் வரும் வரிகளே முத்தையன் கேட்கும் போது அவனுக்கு அவ்வளவாகப் புரியாவிட்டாலும் ஆசை காட்டி மோசஞ் செய்தேனே என்ற வரிகள் தன்னைக் குத்திக் காட்டுவதைப் போலவே உணர்ந்தான். மல்லி குழந்தையைப் பெறப்போகிருள் என்பதறிந்தவுடன் அவன் நடுநடுங்கின்ை. மல்லியின் அருகில் கூட இனிவரக் கூடாது என முடிவு செய்தான். ஒருநாள் ; நடுநிசி. மல்லிக்கு ஏற்பட்ட வேதனையை அறிந்த நல்லவர்கள் சிலர் அவளே ஆஸ்பத்திரியில் சேர்த் தனர். ஆண் குழந்தை ஒன்றை மல்லி பெற்றெடுத்தாள். வயிற்றிலுள்ள ஜீவன் பூமியை மிதித்த பிறகுதான் மல்லிக்கு முத்தையன் நினைவு வந்தது. அவனைக் கடிந்து பேசிய சொற்கள் நினைவுக்கு வந்தது. அவனை விரட்டிய வார்த் தைகள் நெஞ்சில் எழுந்தன. முத்தையா என்று அவள் உதடுகள் முணுமுணுத்தன. அவனேப் பாவி என்று சபித்த வார்த்தைகள் நினைவுக்கு வந்தன. முத்தையனுக்குத் தெரியுமோ த்ன் நிலை என அவள் நினைத்தாள். ஆளுல் முத்தையனே அந்தச் சமயம் பெரிய ஆஸ்பத் திரிக்கல்லவா, எடுத்துச் சென்றிருப்பார்கள். மல்லியிட மிருந்து திரும்பி வந்து எங்காவது ஓடிப்போய்விட