பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90


அன்று முத்தையன் ஆஸ்பத்திரியிலிருந்து விடுதலை யாகும் நாள். அவளுல் இனி மற்ருெருவர் துணையின்றி நடக்க முடியாது. முன்போல் பொறுப்பில்லாமல் சுற்றி இஷ்டம்போல் அலேய முடியாது. மூட்டைத் தூக்கிப் பிழைக்க முடியாது. ஆஸ்பத்திரியிலிருந்த நாட்கள் வரை அவனுக்கு எந்தவிதக் கவலையும் தெரியவில்லை. உலகத்தில் இனி எப்படி வாழப் போகிருேமென்றே அவன் எண்ண வில்லை. ஊன்றுகோல் ஒன்றை ஆஸ்பத்திரியில் கொடுத் தார்கள். அவன் வெளியே வருவதற்கும் மல்லி குழந்தையுடன் ஆஸ்பத்திரிக்குள் நுழைவதற்கும் சரியாக இருந்தது. முத்தையன் மல்லியைப் பார்த்துவிட்டான். அவளேப் பார்க் காமலேயே போய்விட எண்ணினன். அவள் அங்கு எதற்காக வந்திருக்கிருளோ... ஐயா, இங்கே முத்தையன் என்று ஒருத்தர் கால் உடைஞ்சு படுத்திருக்காராமே தெரியுமா?’ என்று மல்லி கேட்பது முத்தையன் காதில் வீழ்ந்தது. அவன் ஒரு கணம் திடுக்கிட்டு நின்றன். தன்னையா மல்லி தேடுகிருள். இந்தப் பாபியையா? அவனுக்கு அழுகையே வந்துவிட்டது. முத்தையணு-அவன் பேரு தெரியாது. காலுடைஞ்சு ஒருத்தனிருந்தான். இப்போதான் டிஸ்சார்ஜ் ஆகிப் போகிருன். அதோ-போகிருன் பார்- ஆஸ்பத்திரி வேலைக்காரன் கூறினன். - 'முத்தையா என்று கூறினுள் மல்லி. தட்டுத் தடுமாறி ஒரு திசையாகச் சென்ருள், முத்தையன் கலங்கிய கண் களுடன் மல்லியை நெருங்கின்ை. மல்லி, மல்லி என்ன மன்னித்து விடு. உனக்குச் செஞ்ச தவறுக்குத் தண்டனை எனக்குக் கிடைச்சுடுத்து மல்லி. இனி வாழ்நாள் முழுவதும் அந்தத் தண்டனையை அனுபவிக்கப் போகிறேன் மல்லி என்று விம்மினன் முத்தையன்.