பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93


தடவைதான் நினைவு திரும்பலாம். அது வந்து போய் விட்டால்......அவ்வளவு தான்......” ராமலிங்கம் தரையை நோக்கியவாறு உணர்ச்சி எதை யும் காட்டிக் கொள்ளாமல் அந்தச் செய்தியை ஏற்ருர், இருவரும் கட்டிலுக்குத் திரும்பினர்கள். மற்றவர்கள் எல்லோரும் ஆவலுடன் இருவர் முகத்தையும் மாறி மாறிப் பார்த்தார்கள். அவர்களால் எதையும் ஊகிக்க முடிய வில்லை.

  • டக்டக் சத்தம் அந்த அறையிலிருந்து கிளம்பி, தாழ்வாரமெங்கிலும் எதிரொலித்து மங்கி மறைந்தது.

ராமலிங்கம் செல்லம்மாளின் முகத்தையே கண் கொட் டாமல் பார்த்துக் கொண்டு நின்ருர். எழுபது வருஷம் வாழ்ந்து வைரம் பாய்ந்திருந்த அவருடைய தேகம், எல்லை யற்ற மனக்கிளர்ச்சியால் துவண்டுபோய் விகாரமாகத் தோற்றமளித்தது. கட்டிலின் ஒரு பக்கத்தில் மகன் வைத்தியும், மருமகள் சரோஜாவும், பெண் உஷாவுடன் நின்று கொண்டிருந் தார்கள். காலடியில் மகள் கமலாவும், மாப்பிள்ளை மணியும், பையன் ரங்குவும் நின்று கொண்டிருந்தார்கள். அவர் ஏதேனும் சொல்ல மாட்டாரா என்று அவர்கள் எல்லோரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தார்கள். செல்லம்மாள் கட்டைபோல் படுத்துக் கிடந்தாள். அவளையே வெறித்து நோக்கிக் கொண்டிருந்த ராமலிங் கத்தின் முகத்தில், திடீரென்று ஒரு மலர்ச்சி தென்பட்டது; அவருடைய உடல் ஒரு தடவை சிலிர்த்துக் கொண்டது. உடனே எல்லோரும் செல்லம்மாளேப் பார்த்தார்கள். இது வரை அசைவற்றுக் கிடந்த அவளுடைய உடம்பு, சற்றே அசைந்ததாகத் தோன்றிற்று. செல்லம்மாளுக்கு நினைவு திரும்பிக் கொண்டிருந்தது. அப்போதுதான் யாரும் எதிர்பார்க்காத காரியம் ஒன்றை ராமலிங்கம் செய்தார். கதவுப் பக்கம் நகர்ந்து கொண்டே அவர் சைகை காட்டி எல்லோரையும் வெளியே